வழிபாட்டுத் தலம்
அழகிய சிங்கப் பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அழகிய சிங்கப் பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருவேளுக்கை |
| ஊர் | காஞ்சிபுரம் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | ஸ்ரீஅழகிய சிங்கர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவர் |
| கல்வெட்டு / செப்பேடு | கல்வெட்டுகள் உள்ளன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. பரிவார சந்நிதிகள் இல்லை. கோபுரம் தற்காலத்தில் அமைக்கப்பட்டது. அதில் சுதைச் சிற்பங்கள் உள்ளன. உடைந்த கொடிப்பெண் தூண் சிற்பம் ஒன்று உள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 1000 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலக் கட்டடக்கலையைப் பெற்றுள்ளது. திருவேளுக்கை என்ற பெயரில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகிறது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது. |
|
சுருக்கம்
1000 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலக் கட்டடக்கலையைப் பெற்றுள்ளது. திருவேளுக்கை என்ற பெயரில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகிறது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது. கி.பி.8-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. பழமையான கட்டட கலைப்பாணி எதும் எஞ்சவில்லை. கருவறை தேவகோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. திராவிடபாணியில் அமைந்த இக்கோயில் திருச்சுற்று மாளிகை பெற்றுள்ளது. திருமதில் சுவர் அமைந்துள்ளது. கிணறு ஒன்று உள்ளது. சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. பரிவார சந்நிதிகள் இல்லை. கோபுரம் தற்காலத்தில் அமைக்கப்பட்டது. அதில் சுதைச் சிற்பங்கள் உள்ளன. உடைந்த கொடிப்பெண் தூண் சிற்பம் ஒன்று உள்ளது.
|
|
அழகிய சிங்கப் பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. பழமையான கட்டட கலைப்பாணி எதும் எஞ்சவில்லை. கருவறை தேவகோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. திராவிடபாணியில் அமைந்த இக்கோயில் திருச்சுற்று மாளிகை பெற்றுள்ளது. திருமதில் சுவர் அமைந்துள்ளது. கிணறு ஒன்று உள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | முழுவதும் புனரமைக்கப்பெற்றுள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | வைகுண்டப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லலாம். செங்கல்பட்டு இரயில் நிலையத்திலிருந்தும் காஞ்சிபுரம் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 -1200முதல் மாலை 4.00-8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 87 |
| பிடித்தவை | 0 |