Back
வழிபாட்டுத் தலம்
சூரக்குண்டு தெற்கு வளவாருக்கு சொந்தமான முனிக்கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் சூரக்குண்டு தெற்கு வளவாருக்கு சொந்தமான முனிக்கோயில்
வேறு பெயர்கள் முனியாண்டி கோயில்
ஊர் சூரக்குண்டு
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு சூரக்குண்டு கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் முனீசுவரர் அருள்பாலிக்கிறார். கருவறை விமானத்திலும், மண்டபத்தின் விதானத்திலும் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
தலத்தின் சிறப்பு இத்தலத்தில் முனீசுவரர் வழிபாடு பயம் அகற்றுவதாக தொன் நம்பிக்கை.
சுருக்கம்
சூரக்குண்டு முனீசுவரர் கோயில் மதுரையிலிருந்து மேலூர் செல்லும் நெடுஞ்சாலையின் வலதுபுறத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சூரக்குண்டு ஊரைச் சேர்ந்த ஒரு இனத்தாருக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும். இங்குள்ள முனீசுவரர் அவர்களுக்கு குலதெய்வமாக அருள்பாலிக்கிறார். மற்ற இனத்தாரும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
சூரக்குண்டு தெற்கு வளவாருக்கு சொந்தமான முனிக்கோயில்
கோயிலின் அமைப்பு சூரக்குண்டு முனீசுவரர் கோயில் மதிற்சுவருடன் காணப்படுகின்றது. மதிற்சுவரையொட்டி கிழக்குமுகமாக தோரணவாயில் முகப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெரிய வளாகம் காணப்படுகிறது. வளாகத்தின் மையப்பகுதியில் மகாமண்டபத்துடன் கூடிய முனீசுவரர் கருவறை விமானம் அமைந்துள்ளது. மண்டபம் தூண்களுடன் காணப்படுகின்றது. உயரமான படிக்கட்டுகளுடன் கூடிய மண்டபத்தைக் கடந்தால் முனீசுவரரின் கருவறையைக் காணலாம். கருவறை விமானம் ஒரு தளத்துடன் கூடியது. திராவிடப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. விமானத்தில் சுதைச் சிற்பங்கள் வண்ணந்தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன. மண்டபத்தின் விதானத்தில் நான்கு மூலைகளிலும் நந்தியும் பூதகணங்களும் காவல் தெய்வங்களாக பரிணமிக்கின்றன.
பாதுகாக்கும் நிறுவனம் தனியார்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் தல கருப்பு கோயில், கள்ளம்பட்டி நடுக்காடு பத்ரகாளியம்மன் கோயில், ஸ்ரீதொட்டிச்சியம்மன் வீடு
செல்லும் வழி மதுரையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 38 வழியாக மேலூர் செல்லும் வழியில் சுமார் 30 கி.மீ. தொலைவில் சூரக்குண்டு நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
சூரக்குண்டு தெற்கு வளவாருக்கு சொந்தமான முனிக்கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
தங்கும் வசதி
ஒளிப்படம் எடுத்தவர் கௌதம் ராஜ், மலைச்சாமி பூமிநாதன், பிரபுசங்கர், அங்குஸ் சிங்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 22
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்