வழிபாட்டுத் தலம்
தெய்வநாயகப் பெருமாள் கோவில், திருவகீந்திரபுரம், கடலூர் மாவட்டம்.
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | தெய்வநாயகப் பெருமாள் கோவில், திருவகீந்திரபுரம், கடலூர் மாவட்டம். |
|---|---|
| வேறு பெயர்கள் | தாஸ ஸத்யன், அச்சுதன், ஸ்த்ரஜ்யோதிஷ், அனகஞ்யோதிஷ், த்ரிமூர்த்தி |
| ஊர் | திருவஹிந்திரபுரம், அயிந்தை |
| வட்டம் | கடலூர் |
| மாவட்டம் | கடலூர் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | தெய்வநாயகன் |
| தாயார் / அம்மன் பெயர் | வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார், பார்க்கவி |
| ஆகமம் | வைகானச ஆகமம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | 11 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் இப்பெருமாளை நின்றருளிய மகாவிஷ்ணு என்றும் ஏழிசை நாதப் பெருமான் என்றும் குறிக்கின்றன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இங்குள்ள விமானத்தில் வைகுண்டத்தில் அமர்ந்திருப்பதைப் போலவே சுத்த ஸ்த்வ விமானத்தின் கீழ், கிழக்குத்திக்கில் பெருமாளும், தெற்கில் தட்சிண மூர்த்தியாகிய சிவனும், மேற்கு திக்கில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மாவும் அமைந்துள்ள திறம் மேற்கூறியவைகளோடு வியந்து ஒப்பு நோக்கத்தக்கதாகும். |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி. |
|
சுருக்கம்
திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இப்பெருமான் மீது வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவையருளிச் செய்தார். மணவாள மாமுனிகள் பன்முறை எழுந்தருளி மங்களாசாசனம் செய்த தலம். வடமொழியில் தேவநாயக பஞ்சாசத்து என்னும் தோத்திரப் பாடலும், பிராக்ருத மொழியில் அச்யுத சதகம் என்ற தோத்திரப் பாக்களடங்கிய நூலும் இத்தலத்தைப் பற்றிப் பரக்கப் பேசுகின்றன. திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று வழங்கப்படுகிறது. நடு நாட்டுத் திருப்பதிகள் இரண்டில் இது ஒன்றாகும்.
|
|
தெய்வநாயகப் பெருமாள் கோவில், திருவகீந்திரபுரம், கடலூர் மாவட்டம்.
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் விமானம் சந்திர விமானம், சுத்தஸ்தவ விமானம் என்ற கட்டிடக் கலை மரபைச் சார்ந்தது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சிதம்பரம் பெரிய கோயில், மேலக்கடம்பூர் கோயில், கீழக்கடம்பூர் |
| செல்லும் வழி | இத்தலம் கடலூர் நகரத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று வழங்கப்படுகிறது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
தெய்வநாயகப் பெருமாள் கோவில், திருவகீந்திரபுரம், கடலூர் மாவட்டம்.
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | அயிந்தை |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | கடலூர் |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | கடலூர் வட்டார விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 23 Nov 2018 |
| பார்வைகள் | 59 |
| பிடித்தவை | 0 |