வழிபாட்டுத் தலம்
ஆதினமிளகி அய்யனார் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் ஆதினமிளகி அய்யனார் கோயில்
வேறு பெயர்கள் அய்யனார் கோயில்
ஊர் நிலையூர்
வட்டம் திருப்பரங்குன்றம்
மாவட்டம் மதுரை
தொலைபேசி 097519 70933
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு ஆர்விப்பட்டி கண்மாய்
வழிபாடு இருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் ஆதினமிளகி அய்யனார் கோயில் சுதைச்சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. நுழைவாயில் கோபுரம், கருவறை விமானம், திருச்சுற்றில் அமைந்துள்ள காவல் தெய்வ கோட்டங்கள் எனப் பல்வேறு இடங்களிலும் சுதைச்சிற்பங்கள் வண்ணச்சிற்பங்களாக விளங்குகின்றன.
தலத்தின் சிறப்பு நீர்நிலையை காக்கும் தெய்வமாக விளங்குகிறார். ஊரில் உள்ள மடைக்கு காவலாக விளங்குகிறார்.
சுருக்கம்
மதுரை மாவட்டம் மதுரை நகரிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையின் மன்னர் கல்லூரிக்கு அருகே வலதுபுறம் செல்லும் சாலையில் நிலையூர் அமைந்துள்ளது. இங்குள்ள ஆதினமிளகிய அய்யனார் கோயில் மிகவும் புகழ் பெற்றது. ஆதினமிளகிய அய்யனார் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோயிலாகும். அங்கிருக்கும் மூலவர் கோயிலிலிருந்து இவ்விடத்திலும் வழிபாடு தொடர்கிறது.
ஆதினமிளகி அய்யனார் கோயில்
கோயிலின் அமைப்பு அய்யனார் கோயில் தற்காலத்தில் புனரமைத்துக் கட்டப்பட்டுள்ளது. பல வண்ணங்களுடன் கூடிய அழகிய திருக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. அய்யனாரின் கருவறையும் முன் மண்டபமும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. தற்காலத்தில் எடுப்பிக்கப்பட்ட அய்யனார் புரவியில் அமர்ந்துள்ள சிற்பம் வண்ணந்தீட்டப்பட்டதாயும், பெரிய அளவினதாயும் காட்சியளிக்கிறது. கோயில் வளாகம் கண்மாய் கரையோரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கோயிலின் முன்வாயில் படிகளுடன் கூடியதாய் உயரமாய் காட்சியளிக்கிறது.
பாதுகாக்கும் நிறுவனம் ஊர் நிர்வாகம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோயில், தென்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் தமிழ்-பிராமிக் கல்வெட்டு
செல்லும் வழி மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் வலதுபுறம் நிலையூர் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
ஆதினமிளகி அய்யனார் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் நிலையூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி திருப்பரங்குன்றம் வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் வெங்கடேஷ் ஆதீனம், ரவிக்குமார் சீனிவாசன், வெங்கட்ரமணன், இளமாறன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 35
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்