வழிபாட்டுத் தலம்
உத்தமபாளையம் சமணக் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | உத்தமபாளையம் சமணக் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சமணக்குகை கோயில் |
| ஊர் | உத்தமபாளையம் |
| வட்டம் | உத்தமபாளையம் |
| மாவட்டம் | தேனி |
| உட்பிரிவு | 6 |
| மூலவர் பெயர் | சமணத் தீர்த்தங்கரர்கள் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / அச்சணந்தி முனிவர் |
| கல்வெட்டு / செப்பேடு | தீர்த்தங்கரர் உருவங்களின் கீழே வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகின்றது. இங்குள்ள தீர்த்தங்கரர்களின் திருமேனிகளை செய்தளித்தவர்களைப் பற்றிய இக்கல்வெட்டு கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. |
| சுவரோவியங்கள் | சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களின் மேல் பூசப்பட்டுள்ள சுதையில் தீட்டப்பட்டிருந்த வண்ணங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. |
| சிற்பங்கள் | உத்தமபாளையம் மலைப் பாறையில் 15-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகாவீரர், பார்சுவநாதர், ஆதிநாதர் உள்ளிட்ட சமணத் தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் இங்கு எழிலார்ந்த தோற்றத்துடன் புடைப்புச் சிற்பங்களாக விளங்குகின்றன. |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. சமணக் குடைவரைக் கோயில். |
|
சுருக்கம்
பக்தி இயக்க காலத்திற்குப் பின் தமிழகத்தில் மீண்டும் சமணம் கி.பி.9-10-ஆம் நூற்றாண்டுகளில் தழைத்தோங்கியது. அக்காலக்கட்டத்தில் குறண்டி, திருக்காட்டுப்பள்ளி, குப்பல் நத்தம், உத்தமபாளையம், பழனி ஐவர் மலை போன்ற பல புதிய மலைகளில் சமணப்பள்ளிகள் தோன்றின. இத்தகைய சமண சமய எழுச்சிக்கு காரணமாக அமைந்த சமணத் துறவி அச்சணந்தி தமிழகமெங்கும் இத்தகு சமணக் குடைவரைகளைத் தோற்றுவித்து, தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களை வழிபாட்டிற்காக அமைத்தார். மலைப்பாறையில் சமணத் தீர்த்தங்கரரின் திருவுருவ புடைப்புச் சிற்பங்கள் பெரிய அளவிலான மலை பரப்பளவில் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் அமைந்துள்ள மலையின் முன்னால் இச்சிற்பங்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு கல் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரு தூண்கள் தாங்கியாக அமையப் பெற்ற இம்மண்டபத்தின் வாயிலாக உட்சென்று காண்கையில் மலைப்பாறையில் அமைக்கப்பட்டுள்ள தீர்த்தங்கரர் சிற்பத் தொகுதிகள் மூன்று கருவறைகளில் அமைக்கப் பெற்றது போன்று காட்சியளிக்கின்றது.
|
|
உத்தமபாளையம் சமணக் கோயில்
| கோயிலின் அமைப்பு | மலைப்பாறையில் சமணத் தீர்த்தங்கரரின் திருவுருவ புடைப்புச் சிற்பங்கள் பெரிய அளவிலான மலை பரப்பளவில் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் அமைந்துள்ள மலையின் முன்னால் இச்சிற்பங்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு கல் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரு தூண்கள் தாங்கியாக அமையப் பெற்ற இம்மண்டபத்தின் வாயிலாக உட்சென்று காண்கையில் மலைப்பாறையில் அமைக்கப்பட்டுள்ள தீர்த்தங்கரர் சிற்பத் தொகுதிகள் மூன்று கருவறைகளில் அமைக்கப் பெற்றது போன்று காட்சியளிக்கின்றது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | உள்ளூர் மக்களால் நிர்வகிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் கோயில், குச்சனூர் சனீஸ்வரர் கோயில் |
| செல்லும் வழி | தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில் 24 கிலோமீட்டர் தொலைவில் உத்தமபாளையம் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Jun 2017 |
| பார்வைகள் | 805 |
| பிடித்தவை | 0 |