Back
வழிபாட்டுத் தலம்
அம்பை காசிபநாதர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அம்பை காசிபநாதர் கோயில்
வேறு பெயர்கள் திருப்போத்துடைய நாயனார், திருப்போத்துடைய தேவர், திருப்போத்துடைய ஆழ்வார்
ஊர் அம்பாசமுத்திரம்
வட்டம் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
தொலைபேசி 04634-253921
உட்பிரிவு 1
மூலவர் பெயர் காசிபநாதர்
தாயார் / அம்மன் பெயர் ஸ்ரீமரகதாம்பிகை
திருக்குளம் / ஆறு தேவி தீர்த்தம், சலா தீர்த்தம், காசிப தீர்த்தம், ருத்ர தீர்த்தம், புழுமாறி தீர்த்தம், கோகில தீர்த்தம்
வழிபாடு உஷைக்காலம், காலை சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தசாமம்
திருவிழாக்கள் பங்குனிப் பெருந்திருவிழா, மார்கழி திருவாதிரை, தைப்பூசம், கந்தசஷ்டி
காலம் / ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
கல்வெட்டு / செப்பேடு கருவறை விமானத்தின் தென்புறச் சுவர்களிலும், வடபுறச் சுவர்களிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில் இவ்வூர் முள்ளிநாடு ராஜராஜ சதுர்வேதி மங்கலத்து இளங்கோக்குடி என்று குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள இறைவன் திருப்போத்துடைய மாதேவர், திருப்போத்துடைய பட்டாரகர், திருப்போத்துடைய நாயனார், திருப்போத்துடைய ஆழ்வார், திருப்போத்துடைய தேவர் எனக் குறிப்பிடப்படுகிறார். இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு விளக்குக் கொடைகளைப் பற்றி இக்கல்வெட்டுகள் பேசுகின்றன.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட புனுகு சபாபதியின் நடனக்காட்சி, திருவாட்சி, வசந்த மண்டபத் தூண் சிற்பங்கள், பள்ளியறை மணியடி மண்டபத் தூண் சிற்பங்கள், ஆறுமுகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்திருக்கும் சிற்பம், மரக்கதவில் திருவிளையாடற் புராணக் காட்சிகள் ஆகிய சிற்பங்கள் எழில் வாய்ந்தவை.
தலத்தின் சிறப்பு 1000 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
சுருக்கம்
திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட புனுகு சபாபதியின் நடனக்காட்சி, திருவாட்சி, வசந்த மண்டபத் தூண் சிற்பங்கள், பள்ளியறை மணியடி மண்டபத் தூண் சிற்பங்கள், ஆறுமுகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்திருக்கும் சிற்பம், மரக்கதவில் திருவிளையாடற் புராணக் காட்சிகள் ஆகிய சிற்பங்கள் எழில் வாய்ந்தவை. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. இறைவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி கருவறைகள் அமைந்துள்ளன. இராஜகோபுர பணி நடைபெற்று வருகிறது. இறைவன் சதுரமான கருவறையில் இலிங்க வடிவில் உள்ளார். அர்த்தமண்டம், முகமண்டபம் மற்றும் மகா மண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபத்தூண்கள் உருளைத்தூண்களாக அமைந்துள்ளன. முகமண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் மேடை போன்ற அமைப்பு உள்ளது. இது அமர்ந்து வேலை செய்பவர்களுக்காக இருக்கலாம். மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சுற்றுப்பிரகாரம், நந்தவனம் அமைந்துள்ளது. கோயில் மிகப்பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. இறைவனது கருவறை விமானம் திராவிட பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதள உறுப்புகள் அனைத்தும் அமைந்துள்ளன. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. கோட்டங்களில் சிற்பங்கள் இடம் பெறவில்லை. இது பாண்டிய நாட்டின் முறைமையாகும்.
அம்பை காசிபநாதர் கோயில்
கோயிலின் அமைப்பு இறைவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி கருவறைகள் அமைந்துள்ளன. இராஜகோபுர பணி நடைபெற்று வருகிறது. இறைவன் சதுரமான கருவறையில் இலிங்க வடிவில் உள்ளார். அர்த்தமண்டம், முகமண்டபம் மற்றும் மகா மண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபத்தூண்கள் உருளைத்தூண்களாக அமைந்துள்ளன. முகமண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் மேடை போன்ற அமைப்பு உள்ளது. இது அமர்ந்து வேலை செய்பவர்களுக்காக இருக்கலாம். மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சுற்றுப்பிரகாரம், நந்தவனம் அமைந்துள்ளது. கோயில் மிகப்பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. இறைவனது கருவறை விமானம் திராவிட பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதள உறுப்புகள் அனைத்தும் அமைந்துள்ளன. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. கோட்டங்களில் சிற்பங்கள் இடம் பெறவில்லை. இது பாண்டிய நாட்டின் முறைமையாகும்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் கிருஷ்ணசுவாமி கோயில், பாபநாசம் சிவன் கோயில்
செல்லும் வழி திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை
அம்பை காசிபநாதர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருநெல்வேலி, தென்காசி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருநெல்வேலி, தென்காசி
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி
ஒளிப்படம் எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 1412
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்