Back
வழிபாட்டுத் தலம்
அயன்தென்கரை ஸ்ரீஅய்யனார் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அயன்தென்கரை ஸ்ரீஅய்யனார் கோயில்
வேறு பெயர்கள் ஐந்துவாசல் அய்யனார் கோயில்
ஊர் அயன்தென்கரை
வட்டம் வாடிப்பட்டி
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு தென்கரைக்குளம்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் அய்யன் கோயில் கருவறையில் பூரணை புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் அய்யன் காட்சி தருகிறார். திறந்த வெளியில் குதிரையின் மீது அமர்ந்த இளம் வீரனாய் அய்யனின் சுதைச் சிற்பம் காணப்படுகிறது.அய்யன் முழுநீள ஆடை கணுக்கால் வரை அணிந்து, கழுத்தில் பலவித மலர்களைக் கொண்ட மாலைகளை சூடியவராய், சடைமகுடம் தரித்து, சிவச்சின்னத்தை நெற்றியில் பூசி, கையில் சாட்டையுடன், கால்களில் செருப்பு அணிந்து, வெள்ளைக் குதிரையேறி புறப்பட்ட நிலையில் இச்சிற்பம் காட்டப்பட்டுள்ளது. குதிரையின் கீழே பார்வதி பரமசிவனார் தவமிருக்கும் முனிவர் ஒருவருக்கு வரமருளும் காட்சியை சுதை வேலைப்பாடமைந்த சிற்பங்களாக அமைத்துள்ளனர். பாய்ந்து வரும் அய்யன் அமர்ந்த குதிரையின் முன்னங்கால்களை இரண்டு வீரர்கள் தங்கள் தலைகளில் தாங்குகின்றனர். இவ்வீரர்கள் பருத்த உடலுடன், பெரிய மீசையுடன், திடகாத்திர தோற்றங் கொண்டராய், கைகூப்பி வணங்கிய நிலையில் நிற்கின்றனர். வீரர்களுக்கே உரிய அரையாடை இடையில் உடுத்தியுள்ளனர். தலையலங்காரம் பாண்டியநாட்டு மக்களின் அலங்காரத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. அணிகள் பலவும் பூண்டுள்ளனர்.
தலத்தின் சிறப்பு வேள்விக்குடி என்று முற்காலப்பாண்டியர் காலத்தில் அழைக்கப்பட்ட சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் மருதத்திணை ஊரைக் காக்கும் அய்யனார் ஆவார்.
சுருக்கம்
சோழவந்தான் தென்கரை ஊராட்சி ஊத்துக்குழி பூர்ணகலா, பொற்கலை உடனுறை ஐந்துவாசல் அய்யனார் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 2016 சூலைத் திங்கம் 15-ஆம் நாள் நடந்தது. கிராமக்குழு மற்றும் திருப்பணிக்குழுவினர் இந்நிகழ்வினை மேற்கொண்டனர். ஐந்துவாசல் அய்யனார் தொன்றுதொட்டு சோழவந்தான் தென்கரைப்பகுதியில் மக்களால் வழிபடப்பட்டு வரும் காவல் தெய்வமாவார். ஐந்துவாசல் அய்யனார் கோயில் புரவி எடுப்புத் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இங்குள்ள தென்கரை குளத்தின் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. அய்யனாருக்கு புரவி எடுப்பு என்பது காலங்காலமாக தொன்றுதொட்டு வரும் வழிபாட்டு மரபாகும்.
அயன்தென்கரை ஸ்ரீஅய்யனார் கோயில்
கோயிலின் அமைப்பு அய்யனார் கோயில் தற்காலத்தில் புனரமைத்துக் கட்டப்பட்டுள்ளது. பல வண்ணங்களுடன் கூடிய அழகிய திருக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. அய்யனாரின் கருவறை முற்காலத்தில் கல்லால் கட்டப்பட்டிருக்கலாம். தற்காலத்தில் எடுப்பிக்கப்பட்ட முன் மண்டபம் செங்கலால் கட்டப்பட்டதாய் வர்ணம் பூசப்பட்டு விளங்குகிறது. கருவறையின் நாற்புறமும் பூதகணங்கள் காவல் காக்கின்ற சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் ஊர் நிர்வாகம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் தென்கரை சிவன்கோயில், திருவேடகம் ஏடகநாதர் கோயில்
செல்லும் வழி சோழவந்தானிலிருந்து ஊத்துக்குளிக்கு உள்ளூர் பேருந்து செல்கிறது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
அயன்தென்கரை ஸ்ரீஅய்யனார் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் ஊத்துக்குளி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சோழவந்தான்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் சிவகுமார், முருகேஸ்வரி, இராதாகிருஷ்ணன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 307
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்