Back
வழிபாட்டுத் தலம்
கீழக்கரை பழைய ஜும்மா பள்ளி
வழிபாட்டுத் தலத்தின் பெயர் கீழக்கரை பழைய ஜும்மா பள்ளி
வேறு பெயர்கள் கீழக்கரை பழைய ஜும்மா பள்ளி அல்லது மீன் கடை பள்ளி
ஊர் கீழக்கரை
வட்டம் கீழக்கரை
மாவட்டம் இராமநாதபுரம்
உட்பிரிவு 8
வழிபாடு ஐந்து காலத் தொழுகை
திருவிழாக்கள் ரமலான், பக்ரீத், மிலாடி நபி
காலம் / ஆட்சியாளர் கி.பி 628-630
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இறை உருவங்கள், மனித உருவங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை செதுக்கப்படவில்லை அது இசுலாத்தின் இறைக்கொள்கைக்கு எதிரானது. நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறான சீறாப்புராணத்தை எழுதிய உமுறு புலவருக்கு ஆதரவாக இருந்த வள்ளல் சீதக்காதி கீழக்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மசூதிக்கு அருகில், முஸ்லீம் வர்த்தகர்-பயனாளியான சதகதுல்லா அப்பாவின் தர்கா உள்ளது.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. கி.பி 628-630 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மசூதி உலகின் மிகப் பழமையான மசூதிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
சுருக்கம்
பழமையான ஜும்மா பள்ளிவாசல் ராமநாதபுர மாவட்டம் கீழக்கரையில் உள்ளது . கீழக்கரையில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசல் குறித்து பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. கீழக்கரை நடுத்தெருவில் உள்ள ஜும்மா பள்ளிவாசல், 17-ம் நூற்றாண்டில் ராமநாதபுரத்தில் ஆட்சி புரிந்த கிழவன் சேதுபதி காலத்தில் அமைச்சராக இருந்த வள்ளல் சீதக்காதியால் மத வேறுபாடுகளின்றி திராவிடக் கட்டிடக்கலை முறையில் உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன .
கீழக்கரை பழைய ஜும்மா பள்ளி
கோயிலின் அமைப்பு ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இம் மசூதி 1036 ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 17ம் நூற்றாண்டில் இராமநாத மன்னர்கள் மற்றும் கீழக்கரை வணிகர்களால் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த மசூதி திராவிட இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இம் மசூதி சோழர் கால கோயிலைப் போல மண்டபத்துடன் கூடிய கருவறை மற்றும் அழகிய கற்தூண்களுடன் காணப்படுகின்றது. இம் மசூதியின் தோற்றம் வெளி மற்றும் உட்புறத்தில் திராவிட கோயில் கட்டிடக்கலை பாணியில் இருப்பினும் தூண்கள் மற்றும் சுவர்களில் இறை உருவங்கள் ஏதும் காணப்படவில்லை. பிரார்த்தனையின் திசையை அடையாளம் காண அனைத்து மசூதிகளைப் போல சுவரில் மிஹ்ராப் (Mihrab) உள்ளது, இது ஒரு மசூதி என்பதற்கான ஒரே சான்று. மசூதியின் சுவர்களில் கலை நயமிக்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வட்டார அழகியல் கூற்றுடன் காணப்படுகின்றது. விட்டங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சுவரில் ஒரு வளைவு வணங்குவதற்கான திசையைக் குறிக்கிறது.
பாதுகாக்கும் நிறுவனம் கீழக்கரை பள்ளிவாசல் கமிட்டி மற்றும் ஜமாத்தார்கள்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ஏர்வாடி தர்கா, திருப்புல்லாணி கோயில்
செல்லும் வழி இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்கு பேருந்தில் செல்லலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை
கீழக்கரை பழைய ஜும்மா பள்ளி
அருகிலுள்ள பேருந்து நிலையம் கீழக்கரை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் இராமநாதபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி கீழக்கரை விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 543
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்