Back
வழிபாட்டுத் தலம்
திருஅன்பில் வடிவழகிய நம்பி திருக்கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருஅன்பில் வடிவழகிய நம்பி திருக்கோயில்
வேறு பெயர்கள் பிரம்மபுரி
ஊர் திருஅன்பில்
வட்டம் ஸ்ரீரங்கம்
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
உட்பிரிவு 2
மூலவர் பெயர் வடிவழகிய நம்பி
தாயார் / அம்மன் பெயர் அழகிய வல்லி நாச்சியார்
திருக்குளம் / ஆறு மண்டுக தீர்த்தம் - கொள்ளிடம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / சோழர், விசயநகரர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் வடிவழகிய நம்பி, கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்டப்பட்டுள்ளார். அழகியவல்லி நாச்சியார் தனி திருமுன் உள்ளது.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
சுருக்கம்
திருமழிசையாழ்வாரால் மட்டும் தலைப்பில் கொடுக்கப்பட்ட ஒரேயொரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இத்தலம் மிகவும் தொன்மையானதாகும். சுந்தர சோழன் தன் எதிரிகளோடு போருக்குச் செல்வதற்கு முன், தனது உடைவாளை இப்பெருமானுக்கு முன் வைத்து வணங்கிச் சென்று போரில் வெற்றி வாகை சூடினான் என்றும், அதற்கு நன்றிக் காணிக்கையாக இத்தலத்திற்கு இறையிலி (ஏராளமான நிலதானம்) செய்ததையும் கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. இக்கோவிலின் பிரகாரத்திலும், சுற்று மதில்களிலும், நடை பாதையிலும் கூட ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. மிகச் சாதாரண நிலையில், சிற்சில பழுதுபாடுகளுடன் விளங்கினாலும், இத்தலம், தொன்மையினாலும், மேன்மையிலும் மிக உயர்ந்ததுதான்.
திருஅன்பில் வடிவழகிய நம்பி திருக்கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயிலின் கருவறை விமானம் தாரக விமானம் என்னும் கட்டிடக்கலைப் பாணியைக் கொண்டு அமைந்துள்ளது. சதுரவடிவ கருவறையில் மூலவர் அமைந்துள்ளார். முன் மண்டபமும், தாயாருக்கு தனித் திருமுன்னும் (சந்நிதியும்) அமைந்துள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்காவல், திருமழபாடி, திருச்சென்னம்பூண்டி சிவன் கோயில்
செல்லும் வழி டோல்கேட்டில் இருந்தும், திருச்சியிலிருந்தும், லால்குடியிலிருந்தும் செல்லலாம். திருப்பேர் நகர் என்று அழைக்கப்படும் (அப்பக்குடத்தான்) சன்னிதியிலிருந்து கொள்ளிட நதிக் கரையை கடந்து நடந்தே வந்தால் சுமார் 2 கி.மீ. தூரம் தான் ஆகும்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருஅன்பில் வடிவழகிய நம்பி திருக்கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருஅன்பில்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் ஸ்ரீரங்கம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி ஸ்ரீரங்கம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 29 Nov 2018
பார்வைகள் 38
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்