Back
வழிபாட்டுத் தலம்
உக்கல் ஸ்ரீபுவனமாணிக்கம் விஷ்ணு கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் உக்கல் ஸ்ரீபுவனமாணிக்கம் விஷ்ணு கோயில்
வேறு பெயர்கள் ஸ்ரீபுவனமாணிக்கம் விஷ்ணு கோயில்
ஊர் உக்கல்
வட்டம் செய்யாறு
மாவட்டம் திருவண்ணாமலை
உட்பிரிவு 2
மூலவர் பெயர் ஸ்ரீபுவன மாணிக்கம் பெருமாள்
தாயார் / அம்மன் பெயர் ஸ்ரீதேவி, பூதேவி
வழிபாடு ஒரு கால பூசை
காலம் / ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / சோழர்
கல்வெட்டு / செப்பேடு கோயிலின் மேற்குப் புறச்சுவரில் உள்ள கல்வெட்டு கி.பி 1014-இல் வெட்டப்பட்ட இராசராசன் காலத்தியக் கல்வெட்டாகும். மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு இராசராச சோழனது பணிமகனும், நித்த விநோத வளநாட்டிலுள்ள ஆவூர்க் கூற்றத்து ஆவூரைத் தனக்குப் பிறப்பிடமாகக் கொண்டவனுமாகிய கண்ணன் ஆரூரன், தன் அரசன் பெயரால் சயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துத் தனியூர் உக்கலாகிய விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்தின் மேலைப் பெருவழியில் ஒரு கிணற்றை அமைப்பித்து அதற்கு நிவந்தம் அளித்துள்ள செய்தியைக் குறிப்பிடுகிறது. இராசராசன் கிணற்றிலிருந்து தொட்டிக்கு நீர் இறைப்பார்க்கு அருண்மொழித் தேவன் மரக்காலால் நாள் ஒன்றுக்கு நெல் இரு குறுணி ஆகத் திங்கள் ஆறுக்கு நெல் முப்பது கலமும், இராசராசன் பெயரால் தண்ணீர் வார்ப்பார்க்கு நாடோறும் நெல் இரு குறுணியாகத் திங்கள் ஆறுக்கு முப்பது கலமும்,இப்பந்தலுக்கு மட்கலம் இடுவார்க்குத் திங்கள் ஒன்றுக்கு நெல் இரு தூணியாகத் திங்கள் ஆறுக்கு நெல் நான்கு கலமும், இராசராசன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதம் ஏற்பட்டால் அவைகளைப் புதுப்பிக்க ஆண்டுதோறும் இருகலனே இரு தூணி நெல்லும் ஆக 66 கலம் எட்டு மரக்கால் நெல் விளையக் கூடிய நிலத்தின் விலைக்குரிய பணத்தையும், அதற்கு வரிக்கு உரிய பணத்தையும் தனியூர் உக்கலாகிய விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார், கண்ணன் ஆரூரனிடம் பெற்றுக்கொண்டு வரி இல்லாமல் நிலத்தை விற்றுக்கொடுத்து அத்தர்மத்தை நடத்துவதாக இசைந்தனர்.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் பிற்காலத்திய பெருமாள் திருவுரு அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு 1000 ஆண்டுகள் பழமையானது.
சுருக்கம்
உக்கல் பெருமாள் கோயிலில் முன்பு புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.இன்று முறையான வழிபாடு இல்லாமலும் பராமரிப்பு இல்லாமலும் உள்ளது.
உக்கல் ஸ்ரீபுவனமாணிக்கம் விஷ்ணு கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம், பலிபீடம் ஆகியவற்றுடன் காணப்பட்டாலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. சோழர் கால உருளைத் தூண்கள் மண்டபங்களில் காணப்படுகின்றன. கருவறை புறச்சுவரின் அதிட்டானத்தில் சோழர் காலத்தியக் கல்வெட்டுகள் உள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் கூழம்பந்தல் கங்கை கொண்ட சோழீஸ்வரம், புலிவலம் சிவன் கோயில், உத்திரமேரூர், மாமண்டூர் குடைவரைகள்
செல்லும் வழி காஞ்சிபுரத்திற்குத் தெற்கே 18 கி.மீ. தூரத்திலும், கூழம்பந்தலிலிருந்து உக்கல் 3 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை
உக்கல் ஸ்ரீபுவனமாணிக்கம் விஷ்ணு கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் உக்கல்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி செய்யாறு விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் திரு.ஆண்டவர் கனி, திரு.மு.இளங்கோவன்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 13 Mar 2019
பார்வைகள் 45
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்