வழிபாட்டுத் தலம்
திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | தென்திருமுல்லைவாசல் |
| ஊர் | திருமுல்லைவாசல் |
| வட்டம் | சீர்காழி |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| தொலைபேசி | 94863 39538 |
| உட்பிரிவு | 1 |
| தாயார் / அம்மன் பெயர் | அணிகொண்ட கோதை, சத்யானந்த சௌந்தரி |
| தலமரம் | முல்லை |
| திருக்குளம் / ஆறு | பிரம்ம தீர்த்தம், சந்திர தீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | மகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை. |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இக்கோயிலின் இறைவன் முல்லைவனநாதர் மூன்றரை அடி உயரத்தில் இலிங்க வடிவில் உள்ளார். உள் சுற்றில் வரசக்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முக சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பைரவர், திருஞானசம்பந்தர் ஆகிய திருவுருவ திருமுன்கள் உள்ளன. தென்முகக்கடவுள் கலைப்படைப்பு சோழர்களின் சிற்பக்கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். |
|
சுருக்கம்
திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. இத்தலம் தென்திருமுல்லைவாயில் எனவும் அழைக்கப்பெறுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 7-வது தலம் ஆகும்.
|
|
திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்
| கோயிலின் அமைப்பு | திருமுல்லைவாசல் ஒரு கடற்கரைத் தலம். உப்பனாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தவுடன் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபத்தைக் காணலாம். ஒரு திருச்சுற்றுடன் விளங்கும் இத்திருக்கோயில் கருவறை விமானம் கீழே சதுர வடிவக்கருவறையாக மூலவர் வழிபாட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் தனி திருமுன் கொண்டு விளங்குகிறார். முருகன், கணபதி ஆகிய கடவுளருக்கான தனி சிறு கருவறைகள் திருச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சீர்காழி பிரமாபுரம் |
| செல்லும் வழி | சீர்காழியில் இருந்து 14 கி. மி. தொலைவில் வங்கக் கடலோரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 40 |
| பிடித்தவை | 0 |