Back
வழிபாட்டுத் தலம்
அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோயில்
வேறு பெயர்கள் மடப்புரம் காளி கோயில்
ஊர் மடப்புரம்
வட்டம் திருப்பூவணம்
மாவட்டம் சிவகங்கை
தொலைபேசி 4574265305
உட்பிரிவு 5
தாயார் / அம்மன் பெயர் பத்திரகாளி
திருக்குளம் / ஆறு வைகை ஆறு, மணிகர்ணி தீர்த்தம், பிரம்மகுண்ட தீர்த்தம்
வழிபாடு உச்சிக்கால பூசை, திருவனந்தல் பூசை, காலசந்தி பூசை, அர்த்தசாம பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி, ஆடித் திருவிழா, தை வெள்ளி, பங்குனித் திருவிழா
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் குதிரையின் அடிப்புறத்தில் பத்திரகாளியம்மன் நின்ற கோலம். மிகப்பெரிய வெண்குதிரை பாய்ந்த நிலையில் அதன் முன்னங்கால்கள் இரு பூதகணத்தாரின் தலை மேல் வைக்கப்பட்டுள்ளன. பத்திரகாளியம்மனைச் சுற்றிலும் பெண்கள் பக்தியுடன் அன்னைக்கு சமர்ப்பிக்க தட்டுகளுடன் நிற்கின்றனர். மிகப்பெரிய பீடத்தின் மீது பத்திரகாளியம்மன் எட்டு கைகளுடன் காட்டப்பட்டுள்ளார். பீடத்தின் இருபுறமும் இரு காவல் பூதங்கள் பெரிய உருவத்தினராய் காட்டப்பட்டுள்ளனர். இச்சிற்பங்கள் அனைத்தும் சுதையால் செய்யப்பட்டு வண்ணந்தீட்டப்பட்டவைகளாகும்.
தலத்தின் சிறப்பு காளி வழிபாடு இங்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக பின்பற்றப்படுகிறது.
சுருக்கம்
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில், சிவகங்கை மாவட்டத்தின், திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது. மடப்புறம் என்பதே சரியான சொல்லாகும். பல கோயில் கல்வெட்டுகளில் மடப்புறம் என்ற சொல் பயின்று வருகின்றது. கோயில் விளங்கும் இடத்தில் உள்ள மடத்திற்கு ஏதாவது கொடையளித்தால் அது மடப்புறமாக கருதப்படும். அவ்வாறு இந்தக் கோயில் மடப்புற வளாகமாக அமைந்துள்ளது. இந்த கோயில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இங்கு பத்திரகாளி அம்மனின் இரு புறங்களில் பக்கத்திற்கு ஒன்றாக, இரண்டு பூதகணங்களின் தோள்கள் மீது, குதிரையின் கால்கள் தூக்கி வைத்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் அய்யனாரும், வினை தீர்க்கும் விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலைகள் சாத்தி வழிபடுகின்றனர்.
அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோயில்
கோயிலின் அமைப்பு ஐந்து நிலை இராஐகோபுரம் கோயில் அமைவிடத்திற்கு வடக்கே அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நிலை இராஐகோபுரம் கோயில் அமைவிடத்திற்கு வடக்கே உள்ளது. அருள்மிகு பத்திரகாளியம்மன் சன்னதி கருவறையின்றி வெட்டவெளியில் அமைந்துள்ளது. பத்திரகாளியம்மன் குதிரையின் நடுவில் நின்றகோலத்தில் அருட்பாலிக்கிறார்.விநாயகர் சன்னதி பத்திரகாளியம்மனுக்கு இடது புறத்தில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. அருள்மிகு கருப்பணசாமி சன்னதி பத்திரகாளியம்மனுக்கு வலது புறத்திலும், அதனையடுத்துஅருள்மிகு காணியாண்டவர் சன்னதியும், பேச்சியம்மன் காமாட்சியம்மன் சன்னதி அய்யனார் சன்னதிக்கு அருகிலும் அமைந்துள்ளன. அருள்மிகு அரசப்பராஜா சன்னதி பத்திரகாளியம்மனுக்கு எதிரே மேற்கு நோக்கி உள்ளது. வீரபத்திரசாமி சன்னதி அய்யனார் சன்னதிக்கு வலதுபுறத்திலும், அருள்மிகு முத்துக்கருப்பர்சாமி சன்னதி அய்யனார் சன்னதிக்கு வலதுபுறத்திலும், அருள்மிகு சின்னஅடைக்கன் சன்னதி பத்திரகாளியம்மன் சன்னதிக்கு எதிரேயும் அமைந்துள்ளது. அதனையடுத்து அருள்மிகு சிற்பி சன்னதி பத்திரகாளியம்மன் சன்னதியும் அமைந்துள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருப்பூவணம் பூவணநாதர் கோயில், வைகை ஆறு
செல்லும் வழி மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 85 வழியாக ஏறக்குறைய 24 கி.மீ. தொலைவில் திருப்பூவணத்திற்கு அருகில் மடப்புறம் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் மடப்புரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி திருப்பூவணம் வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் ஜெயந்தி அனில், கரண் சுதாகரன், முத்துராஜ், ரமேஷ் கமலா, சிவா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 1346
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்