திருவாடுதுறைச் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | திருவாடுதுறைச் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | திருவாடுதுறை |
| ஊர் | திருவாடுதுறை |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் /செகவீரபாண்டிய கட்டபொம்ம நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1779 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 21 செ.மீ. நீளம், 13 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
திருச்செந்தூர் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியசுவாமி கோயில் திருப்பணி மற்றும் வழிபாட்டிற்காக செகவீரபாண்டிய கட்டபொம்ம நாயக்கரின் ஆட்சியின் கீழ் அமைந்த உம்பளக் கிராமம், சீவித்துக் கிராமம் ஆகிய அனைத்திடங்களிலும் உள்ள எல்லா சாதியினர் வீட்டிற்கும் ஆண்டு ஒன்றிற்கு மரக்கால் (குறுணி) தானியம் வீதம் வரி வசூலிக்கப் பிறப்பித்த ஆணையை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. முருகனின் பெருமையும், வீரபாண்டிய கட்டபொம்மனின் சிறப்புக்களும் சொல்லப்பட்டுள்ளன. செப்பேட்டினை எழுதியவர் இராயசம் குமாரசாமியா பிள்ளை மகன் சுப்பிரமணியபிள்ளை ஆவார். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
8 Files
-
Tamilaga cheppedugal_Page_164-Front...
-
Tamilaga cheppedugal_Page_164-Front...
-
Tamilaga cheppedugal_Page_164-Front...
-
Tamilaga cheppedugal_Page_164-Front...
-
Tamilaga cheppedugal_Page_165 - Fro...
-
Tamilaga cheppedugal_Page_165-Backs...
-
Tamilaga cheppedugal_Page_165-Backs...
-
Tamilaga cheppedugal_Page_166-Backs...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 07 Sep 2017 |
| பார்வைகள் | 205 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |