Back
செப்பேடு
சின்னம்பட்டிச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் சின்னம்பட்டிச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் சின்னம்பட்டி
ஊர் திருப்பனந்தாள்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மொழியும்எழுத்தும் தமிழ்-தெலுங்கு
அரசு/ஆட்சியாளர் மதுரை நாயக்கர் / அரசன் விசயரங்க சொக்கநாத நாயக்கர்
வரலாற்று ஆண்டு கி.பி.1726
அளவுகள் / பரிமாணங்கள் 27 செ.மீ X 21 செ.மீ
விளக்கம்

          இச் செப்பேட்டின் கைப்பிடி உடைந்து மீண்டும் பற்றவைக்கப்பட்டுள்ளது. கைப்பிடியில் அடிப்பகுதியில் மலர்மாலை சூட்டப்பெற்று ஒரு சிவலிங்கமும் அதன் முன்பு ஒரு முத்தலைச் சூலமும் வரையப்பட்டுள்ளது. பிற வேலைப்பாடுகள் இல்லை. ஒரு மகர சங்கராந்திப் புண்ணிய தினத்தில் காசி விசுவநாதருக்கும் விசாலாட்சி அம்மைக்கும் நித்திய பூசைக் கட்டளைக்கும், கார்த்திகை, விசாகப் பூசைக்கும், அன்னதானத்திற்கும், காசியில் வாழும் பிராமணர்கட்கு வருட அர்ச்சனை, மகசுேவரபூசை வில்வத்தோட்டம் ஆகியவற்றிற்கும் தாமிரபரணித் தீரத்தில் அரியநாபுரம் செவ்வலாகோட்டம் சிற்றுார் சின்னம்பட்டியைக் கொடையாகக் கொடுக்கப்பட்ட செய்தியை இத்தெலுங்குச் செப்பேடு கூறுகிறது.

          இக்கொடை காசிமடத்து அதிபர் தில்லைநாயகத் தம்பிரான் அவர்கள் வசம் அளிக்கப்பட்டுள்ளது. சிவராமய்யா என்பவர் இச்செப்பேட்டை எழுதியுள்ளார்.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
சின்னம்பட்டிச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_CPS_00163_சின்னம்...

  • TVA_CPS_00163_சின்னம்...

  • TVA_CPS_00163_சின்னம்...

  • TVA_CPS_00163_சின்னம்...

  • TVA_CPS_00163_சின்னம்...

  • TVA_CPS_00163_சின்னம்...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 19 Dec 2017
பார்வைகள் 156
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு