செப்பேடு
சந்தையூர் செப்பேடு
செப்பேட்டின் பெயர் சந்தையூர் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் சந்தையூர்
ஊர் சந்தையூர்
வட்டம் பேரையூர்
மாவட்டம் மதுரை
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / திருமலை நாயக்கர்
வரலாற்று ஆண்டு கி.பி.1675
அளவுகள் / பரிமாணங்கள் 22 செ.மீ. நீளம், 14 செ.மீ. அகலம்
விளக்கம்

திருமலை நாயக்கர் சந்தையூர் கிருஷ்ணர் கோயிலுக்கு வந்தபோது கூளப்பநாயக்கரும், வீரணன் சேருவையும் பாதகாணிக்கை வைத்து வணங்கி மரியாதை செய்தனர். வீரணன் சேர்வைக்கு 18 பட்டி கிராம காவல் நாட்டாண்மை, சாதி கம்பிளிக்கார அதிகாரம் ஆகியவை முன்பு கூளப்ப நாயக்கனால் தரப்பட்டிருந்ததை திருமலை நாயக்கரும் ஏற்று உறுதிசெய்தார். கூடலூர் கம்பம், உத்தப்ப நாயக்கன் வெள்ளை மலை, மதுரை மேலவாசல் ஆகிய எல்லைக்கு உட்பட்ட வலையன் மூப்பன்மார் வாழும் பகுதிக்கு வீரணன் சேருவை சாதி மூப்பன் எனப் பட்டம் கொடுத்து அவ்வூர்களில் தீர்ப்புச் சொல்ல கம்பளி விரித்து பிடி செம்புடன் அமரும் அதிகாரமும் வழங்கப்பட்டது. அப்படி அமரும்போதும் தீர்ப்பளித்து எழும் போதும் அவருக்கு தட்டில் வெற்றிலைப் பாக்குடன் 5 பணம் வைத்து மரியாதை செய்ய வேண்டும் என்றும் உறுதி செய்யப்பட்டு பட்டயம் வழங்கப்பட்டது. சாட்சிகள், பட்டயம் எழுதியவர் பெயர்களும் ஓம்படைக் கிளவியில் சதுரகிரி சிவன், பெருமாள் கோயில்களும் சொல்லப்பட்டுள்ளன.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
சந்தையூர் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • Sandhaiyur 2 -1.jpg

  • Sandhaiyur 2 -2.jpg

  • Sandhaiyur 2 -3.jpg

  • Sandhaiyur 2 -4.jpg

  • Sandhaiyur 2 -5.jpg

  • Sandhaiyur 2 -6.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 190
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு