Back
செப்பேடு
ஒ.கோயில்பட்டிச் செப்பேடு
செப்பேட்டின் பெயர் ஒ.கோயில்பட்டிச் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் ஒ.கோயில்பட்டி
ஊர் ஒ.கோயில்பட்டி
வட்டம் சாத்தூர்
மாவட்டம் விருதுநகர்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் நாயக்கர் / வீரப்ப நாயக்கர்
வரலாற்று ஆண்டு கி.பி. 1651
அளவுகள் / பரிமாணங்கள் 26 செ.மீ. நீளம், 22 செ.மீ. அகலம்
விளக்கம்

முதனூறு, பெனுகொண்டா, படைவீடு, தாராபுரம் முதலிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்ட செட்டி குலத்தினைச் சேர்ந்த மதுரை, திருமங்கலம், வெம்பக்கோட்டை, தாயநேரி உள்ளிட்ட 14 ஊர்களில் இச்சாதியார்கள் கூடி, திம்மி செட்டி, காரமல்லி செட்டி ஆகிய இருவருக்கும் அளித்த சிறப்பினைக் குறிக்கிறது இச்செப்பேடு. திம்மி செட்டியும், காரமல்லி செட்டியும் சேர்ந்து, சாதி வாரியாக வசூலித்த பொன் 7000, திருமண வரி மற்றும் பிற இனங்களில் வசூலித்த பொன் 5400. இவையனைத்தையும் கொண்டு மதுரை சொக்கநாதருக்கு கட்டளை ஏற்படுத்தி அக்கோயிலில் கல்வெட்டுவித்து நற்பணி புரிந்தமைக்காக, அவ்விருவர்க்கும் குற்ற சட்டம் நிர்வகிக்கும் உரிமையையும், கோயிலில் பஞ்சாட்சரம், பாக்கு, வெற்றிலை, சந்தனம் ஆகியவை முதலில் பெறும் மரியாதையினையும் வழங்கியதை இச்செப்பேடு தெரிவிக்கிறது. மேலும் இருபிரிவுகளாக இருந்த இச்செட்டியார்கள் இனி ஒரே குழுவாக (இருமுடியும் ஒருமுடியாக கூடி) இருக்க முடிவு செய்த செய்தியினையும் இச்செப்பேடு தெரிவிக்கிறது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
ஒ.கோயில்பட்டிச் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • TVA_CPS_00027_கோயில்ப...

  • TVA_CPS_00027_கோயில்ப...

  • TVA_CPS_00027_கோயில்ப...

  • TVA_CPS_00027_கோயில்ப...

  • TVA_CPS_00027_கோயில்ப...

  • TVA_CPS_00027_கோயில்ப...

  • TVA_CPS_00027_கோயில்ப...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Sep 2017
பார்வைகள் 97
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு