Back
செப்பேடு
இராமநாதபுரம் சேதுராசன் பேட்டை வணிகர்கள் செப்பேடு
செப்பேட்டின் பெயர் இராமநாதபுரம் சேதுராசன் பேட்டை வணிகர்கள் செப்பேடு
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் பெருவயல்
ஊர் பெருவயல்
வட்டம் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மொழியும்எழுத்தும் தமிழ்-தமிழ்
அரசு/ஆட்சியாளர் சேதுபதி / குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி
வரலாற்று ஆண்டு கி.பி.1741
விளக்கம்

          தேவிப்பட்டினத்தை அடுத்த பெருவயல் கிராமத்தில் தளவாய் வயிரவன் சேர்வைக்காரரால் நிர்மாணிக்கப்பட்டது இரணபலி முருகையா திருக்கோயிலாகும். இந்தக் கோயிலின் பூசை முதலியவைகளுக்கு அதே தளவாய் முதலூர், சக்கிரவாளநல்லூர், சதுர்வேதமங்கலம், பாம்பாட்டி, பாஞ்சார் ஆகிய கிராமப் பகுதிகளை சொந்தமாக வாங்கி தானம் வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் பேட்டை வணிகப்பெருமக்களும் இந்தக் கோயில் பயன்பாட்டுக்கு மகமை ஒன்றை ஏற்படுத்தியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

          இராமநாதபுரம் பேட்டைக்கு வரப்பெறுகின்ற பஞ்சு, பாக்கு, மிளகு, பலசரக்கு, செம்பு ஆகியவைகளுக்கு பொதி ஒன்றுக்கு அரைப்பணமும் நெல், நவதானியம், வெற்றிலை, பருத்தி முதலயவைகளுக்கு உரிய மகமையும் வசூலித்து இந்தத் திருக்கோயிலின் அபிஷேக, நெய்வேதன, திருமாலை, திருவிளக்கு, திருவிழா, திருநந்தவனம் ஆகியவைகளுக்கு வழங்குவது என்ற இந்த வணிகர்களது இசைவுமுறியாக இந்தச் செப்பேடு அமைந்துள்ளது.

குறிச்சொல்
குறிப்புதவிகள்
இராமநாதபுரம் சேதுராசன் பேட்டை வணிகர்கள் செப்பேடு
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    13 Files

  • 88-1.jpg

  • 88-2.jpg

  • 88-3.jpg

  • 88-4.jpg

  • 88-5.jpg

  • 88-6.jpg

  • 88-7.jpg

  • 88-8.jpg

  • 88-9.jpg

  • 88-10.jpg

  • 88-11.jpg

  • 88-12.jpg

  • 88-13.jpg

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 18 Dec 2017
பார்வைகள் 100
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய செப்பேடு