செப்பேடு
ஈரவயல் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | ஈரவயல் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | ஈரவயல் |
| ஊர் | திருப்பனந்தாள் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ், தெலுங்கு, கிரந்தம் |
| அரசு/ஆட்சியாளர் | புதுக்கோட்டைத் தொண்டைமான் / விசைய ரகுநாத ராயத் தொண்டைமானார் |
| வரலாற்று ஆண்டு | 25.7.1790 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 29 செ.மீ x 22.5 செ.மீ |
|
விளக்கம்
25.7.1790 அன்று விசைய ரகுநாத ராயத் தொண்டைமானார் அவர்கள் காசியில் அன்னதானக் கட்டளைக்காகத் தருமபுரம் சிவஞானசம்மந்த தேசிகர் சீடரான காசிவாசி சிதம்பரனாதத் தம்பிரானவர்கள் வசம் கோனாட்டு ஈரவயலைச் சர்வ மானியமாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது. நிலம் அளிக்கப்பெற்ற ஈரவயல் வாழைக்குறிச்சி எல்லைக்கு உட்பட்டது என்றும், அது நன்செய் நிலப்பகுதி என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தச் செப்பேட்டுச் செய்தியை பழனியப்ப வாத்தியார் மகன் ரகுநாத வாத்தியார் எழுதியுள்ளார். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம்,
|
|
செப்பேடு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
9 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 143 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |