ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | காரைக்குடி |
| ஊர் | காரைக்குடி |
| வட்டம் | காரைக்குடி |
| மாவட்டம் | சிவகங்கை |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | சேதுபதி / ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1709 |
|
விளக்கம்
இராமேசுவரம் தனுஷ்கோடிக் கரையில் அக்ரகாரத் தர்மமாக இராமநாதபுரம் சீமை தேர்போகி நாட்டு களத்தூர் கிராமத்தின் ஐம்பத்து ஐந்து கன பாகம் மட்டும் வீரமநல்லூர் வெங்கடேஸ்வரய்யன் புத்திரன் சங்கர நாராயண அய்யனுக்கு அக்ரகார தானமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இதனை வழங்கியவர் ரகுநாத கிழவன் சேதுபதி மன்னரது மனைவி காதலி நாச்சியார் ஆவார். குதிரைகளுக்கு விலாடம் கட்டும் தொழிலுக்கு வரி விதிப்பு ஏற்பட்டதை இந்த ஒரு செப்பேட்டில் தான் காணமுடிகிறது. தானமாக வழங்கப்பட்ட பிறகு இந்த களத்தூரின் பெயர் “ரெகுநாதராய காதலி ஆயிபுரம்“ என வழங்கப்பட்டது. ஆயி என்ற விகுதி கள்ளர், மறவர் இனப் பெண்மணிகளைக் குறிப்பதாகும். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 18 Dec 2017 |
| பார்வைகள் | 111 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |