பாலக்கோம்பை செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | பாலக்கோம்பை செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | பாலக்கோம்பை |
| ஊர் | பாலக்கோம்பை |
| வட்டம் | ஆண்டிப்பட்டி |
| மாவட்டம் | தேனி |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | கி.பி.1654 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 21 செ.மீ. நீளம், 14.5 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
மதுரையில் ஆரியவம்ச மல்லினாக்கன் மகன் ராமலிங்கம் பிள்ளை, சென்னைப்பிள்ளை மற்றும் இவர்களைச் சேர்ந்த 7 குடும்பங்கள் வசித்து வந்தபோது திருமலை நாயக்கர் இவர்களிடம் பெண் கேட்டதால் இவர்கள் மதுரையை விடுத்து முரிஞ்சு நாடு சென்று ஆரியபட்டி என்று ஊரமைத்து இருந்தனர். அங்கு கள்ளர் தொந்தரவு இருந்தது. அங்கிருந்து மேல் மங்கலரேவு வந்து குடியிருந்தனர். அப்போது சதுரகிரி காமய நாயக்கரிடம் சக்கரை, வெத்திலை, பாக்கு, தட்சிணை வைத்து மரியாதை செய்து காமய நாயக்கரின் கீழ்ப்படிந்தவர்களானார்கள். காமயநாயக்கரும் தன்படையில் கூடுதலாகச் (சேவுகா விருத்தி) சேர்த்துக் கொண்டு படி, பாற்சீலை, துப்பட்டி, தலைப்பாகை ஆகிய மரியாதைகள் கொடுத்தார். இச்சமயத்தில் கரட்டுமுந்தல் என்ற இடத்தில் துள்ளுக்குட்டி நாயக்கர் என்பவர் காமயநாயக்கருக்குக் கட்டுப்படாமல் இருக்கவே, காமயநாயக்கரின் ஆணைப்படி இந்த ஆரியவம்சத்தினர் அவனைக் கொன்று வெற்றி கண்டனர். இதற்காக காமயநாயக்கன் இவர்களுக்கு மங்கலரேவைச் சேர்ந்த எட்டுபட்டி கிராம நாட்டாண்மை தந்துச் செப்புப்பட்டயம் வழங்கினார். பாறைக்குளம் மஞ்சள் மடைப்பாசனத்தில் 7 காளி நஞ்சை நிலம், ஆற்றுக்கு வடக்கில் 10 சங்கிலி புன்செய் நிலம், பெருமாள் கோயில், விநாயகர் கோயில் மானியங்கள் ஆகியவையும் வழங்கப்பட்டன. |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2006
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
6 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2017 |
| பார்வைகள் | 225 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |