இலந்தைக்குளம் செப்பேடு
| செப்பேட்டின் பெயர் | இலந்தைக்குளம் செப்பேடு |
|---|---|
| செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் | இலந்தைக்குளம் |
| ஊர் | இலந்தைக்குளம் |
| வட்டம் | வத்திராயிருப்பு |
| மாவட்டம் | விருதுநகர் |
| மொழியும்எழுத்தும் | தமிழ்-தமிழ் |
| அரசு/ஆட்சியாளர் | நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| வரலாற்று ஆண்டு | 23.7.1654 |
| அளவுகள் / பரிமாணங்கள் | 29 செ.மீ நீளம், 19 செ.மீ. அகலம் |
|
விளக்கம்
திருமலை நாயக்கர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியாரை வணங்கச் சென்று கொண்டிருந்த வழியில் குலையப்பாறை பருவத தடாகம் என்ற இடத்தில் ஒரு பெண்ணும் அவளது குழந்தைகளும் தலைவிரிகோலமாக அழுது புலம்பிப் பெருத்த ஆரவாரம் செய்து கொண்டிருந்ததைக் கண்டு தனது இராச்சியத்தில் தனது விசயத்தின் போது ஏன் இப்படி ஒரு அவலம் என்று சினந்து அப்பகுதி வெள்ளிக்குறிச்சி பாளையக்காரர் சீரங்க நாயக்கரை அழைத்துக் காரணத்தை வினவினார். பாளையக்காரர் அப்பெண்ணிடம் காரணத்தை வினவ, அப்பெண்ணின் கணவன் புலியால் கொல்லப்பட்டான் என்பதை அறிந்து திருமலை மன்னரிடம் தெரிவிக்க, மன்னர் அப்புலியைக் கொள்வதற்கு ஆணையிட்டார். அப்புலியைக் கொல்ல மூவரையத் தேவன் என்னும் வீரன் முன்வந்தான். அவனும் அவனது உறவினர் ஆறுபேரும் சீரங்கநாயக்கனுடன் சென்று புலியைத் தேடிக் கொன்றார்கள். அவனுக்குத் “திருமலை மூவரையத்தேவன்“ என்று திருமலை நாயக்கர் பட்டமளிதார். வத்திராயிருப்பை ஒட்டிய கிராமத்தைத் தந்து செம்புப் பட்டயம் வழங்கினார். |
|
|
குறிச்சொல்
|
|
|
குறிப்புதவிகள்
திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
13 Files
-
TVA_CPS_00003_இலந்தைக...
-
TVA_CPS_00003_இலந்தைக...
-
TVA_CPS_00003_இலந்தைக...
-
TVA_CPS_00003_இலந்தைக...
-
TVA_CPS_00003_இலந்தைக...
-
TVA_CPS_00003_இலந்தைக...
-
TVA_CPS_00003_இலந்தைக...
-
TVA_CPS_00003_இலந்தைக...
-
TVA_CPS_00003_இலந்தைக...
-
TVA_CPS_00003_இலந்தைக...
-
TVA_CPS_00003_இலந்தைக...
-
TVA_CPS_00003_இலந்தைக...
-
TVA_CPS_00003_இலந்தைக...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 05 Sep 2017 |
| பார்வைகள் | 150 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |