வழிபாட்டுத் தலம்
கடசாரி அரிய குறும்பன் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் கடசாரி அரிய குறும்பன் கோயில்
வேறு பெயர்கள் குறும்பன் கோயில்
ஊர் பொருப்புமேத்துபட்டி
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
தொலைபேசி 098848 59079
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு பொருப்புமேத்துப்பட்டி ஊர் கண்மாய்
வழிபாடு இருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் கி.பி.17-ஆம் நூற்றாண்டு/நாயக்கர் காலம்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் அருள்மிகு அரிகுரும்பன் கோயிலில் பெரிய கருப்பசாமி, சின்ன கருப்பசாமி, இராக்கம்மாள், பேச்சியம்மன், அன்னையர் எழுவர், மாயாண்டிச்சாமி, கருந்தவசி, பிள்ளையார் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. இச்சிற்பங்கள் யாவும் கருங்கல்லால் ஆனவை. சின்னகருப்பசாமியும், இராக்கம்மாள் அம்மனும் தனிக் கருவறையில் வழிபடப்பெறுகின்றனர். அரிகுரும்பன் கருவறையின் முன்புறம் அவருக்கு யானை வாகனமாக அமைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
தலத்தின் சிறப்பு கடசாரி அரியகுரும்பன் கோயில் காவல் தெய்வக் கோயிலாகும். பல்குடிகளுக்கு குலதெய்வக் கோயிலாக விளங்குகின்றமை குறிப்பிப்படத்தக்கது.
சுருக்கம்
பொருப்புமேத்துப்பட்டி கடசாரி அரியகுரும்பன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர். இக்கோயிலில் பல காவல் தெய்வங்கள் வழிபாட்டில் உள்ளனர். பேச்சியம்மன், மாயாண்டிச்சாமி, கருந்தவசி, பெரியகருப்பசாமி, சின்னகருப்பசாமி, இராக்கம்மாள், கன்னிமார் எழுவர் ஆகிய தெய்வங்களும் இங்கு வழிபடப்பெறுகின்றன. இச்சிற்பங்கள் யாவும் கற்சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளவை இங்கு குறிப்பிடத்தக்கது. இக்கோயில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானதாகக் கருதப்படுகிறது.
கடசாரி அரிய குறும்பன் கோயில்
கோயிலின் அமைப்பு கடசாரி அரிய குறும்பன் கோயில் நாற்புறமும் மதிற்சுவரைக் கொண்டு விளங்குகிறது. நுழைவாயிலையடுத்து கோயில் திருச்சுற்று, கொடிமரம், வாகன பீடம், முன்மண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைக் கொண்டுள்ளது. அரிய குறும்பன் திருச்சுற்று மாளிகையில் பல்வேறு காவல் தெய்வங்களின் சன்னதிகள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன. இக்கோயிலின் வளாகம் நாட்டார் கோயில்களைப் போன்று அல்லாமல் சற்றுப் பெரியதாக வைதீக சமயக் கோயில் போன்று தற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. காவல் தெய்வங்களாகிய பெரிய கருப்பசாமி, சின்னகருப்பசாமி மற்றும் ஏழுகன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கு அறைகள் போன்று தனித்தனி சிற்றாலயங்கள் திருச்சுற்று மாளிகையில் கட்டப்பட்டுள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் ஊர் நிர்வாகம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் முத்தாலம்மன் கோயில், பெத்தண்ணசாமி கோயில்
செல்லும் வழி உசிலம்பட்டியிலிருந்து பொருப்புமேத்துப்பட்டியை அடையலாம். உள்ளூர் பேருந்துகள் செல்கின்றன.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
கடசாரி அரிய குறும்பன் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் பொருப்புமேத்துப்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி உசிலம்பட்டி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் ஜே.கே.முத்து, தங்கப்பாண்டி ரவி
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 52
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்