வழிபாட்டுத் தலம்
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | அக்னீஸ்வரம் |
| ஊர் | திருக்காட்டுப்பள்ளி |
| வட்டம் | தஞ்சாவூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | அக்னீசுவரர் |
| தாயார் / அம்மன் பெயர் | சௌந்தர நாயகி, அழகம்மை |
| திருக்குளம் / ஆறு | அக்னி தீர்த்தம் |
| திருவிழாக்கள் | பிரதோஷம், சிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| கல்வெட்டு / செப்பேடு | இத்தலத்தில் முற்கால சோழர் காலத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுக்களில் அம்மன் பெயர் அழகமர்மங்கை எனக் குறிக்கப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் நான்கு கால நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் கும்பாபிஷேகம் 1983 ம் ஆண்டில் நடைபெற்றுள்ளது. முதலாம் ஆதித்திய சோழனின் காலத்திய கலைப்பாணியை பெற்று விளங்குகிறது. |
| சிற்பங்கள் | மூலவர் அக்னீசுவரர் சுயம்புலிங்கமாக காணப்படுகிறார். சிவலிங்கம் உருவில் சிறியது. மூலவர் குறுகிய கருவறைக்குள் உள்ளார். கருவறைத் திருச்சுற்றில் யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். உள்சுற்றில் விநாயகர் அமர்ந்துள்ளார். இலிங்கோத்பவர் விநாயகருக்குப் பக்கத்தில் தனி திருமுன் ஒன்றில் காணப்படுகிறார். மேற்கு கோட்டத்தில் அர்த்தநாரீசுவரர் உள்ளார். அடுத்து வள்ளி தெய்வயானை உடனுறை ஆறுமுகப் பெருமானும், அருகில் காசி விசுவநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை ஆகியோருக்கான தனித்தனி திருமுன் காணப்படுகின்றன. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலம். இச்சிவாலயத்தின் மூலவர் அக்கினீசுவரர். இவர் தீயாடியப்பர் என்றும் அறியப்படுகிறார். அம்பாள் சௌந்தரநாயகி என்றும் அழகமர்மங்கை என்றும் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஒன்பதாவது சிவத்தலமாகும்.
|
|
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்
| கோயிலின் அமைப்பு | மேலைத் திருக்காட்டுப்பள்ளி சிவாலயம் 5 நிலை கோபுரத்துடனும், 3 திருச்சுற்றுகளைக் கொண்டும் அழகுற அமைந்துள்ளது. மூலவர் அக்னீசுவரர் கருவறை தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு பள்ளப்பகுதியில் இருக்கிறது. இறைவி சௌந்தரநாயகி தனி சிற்றாலயத்தில் வீற்றிருக்கிறாள். இறைவன் கருவறையின் இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி திருமுன் (சன்னதி) அமைக்கப்பட்டிருக்கிறது. தீயாடியப்பர் ஆலயத்தின் உள்ளே விட்ணு சீனிவாச பெருமாள் என்ற திருப்பெயர் கொண்டு தனி திருமுன் கொண்டுள்ளார். இத்தலத்திலுள்ள இரண்டாம் திருச்சுற்றில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருவையாறு, திருக்கண்டியூர், கீழைத் திருக்காட்டுப்பள்ளி |
| செல்லும் வழி | திருவையாறு - கல்லணை சாலையில் திருவையாற்றுக்கு மேற்கே 15 கி.மீ.தொலைவில் குடமுருட்டியாற்றின் தென்கரையில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி கோவில் உள்ளது. திருச்சி, தஞ்சையிலிருந்தும், திருக்கண்டியூர், திருவையாறு, கல்லணை முதலிய இடங்களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 -11.00 முதல் மாலை 4.00-8.30 வரை |
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | திருக்காட்டுப்பள்ளி |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | திருவையாறு |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | திருவையாறு விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | American Institute of Indian Studies |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | American Institute of Indian Studies |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 03 Sep 2018 |
| பார்வைகள் | 105 |
| பிடித்தவை | 0 |