வழிபாட்டுத் தலம்
விசயமங்கலம் சமணக் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | விசயமங்கலம் சமணக் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | ஸ்ரீ அமணேஸ்வரர் ஆலயம் |
| ஊர் | விசயமங்கலம் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| உட்பிரிவு | 6 |
| தாயார் / அம்மன் பெயர் | குஷ்மாண்டினி தேவி (தர்மதேவி) |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | சமணர் கோயிலுள்ள ஒரு கல்வெட்டில் திருவிளக்கு இரண்டு, அமுதுபடி முதலியவற்றிக்கு அக்கோயிலில் பரம்பரை உரிமையுடைய ஸ்ரீவத்ச கோத்திரத்தைச் சேர்ந்த பண்டிதப் பெருமாள் கெங்காழ்வான் ஆனை அச்சு ஸ்ரீயக்கி பழஞ்சலாகை அச்சு என்ற நாணயம் இரண்டு உபயமாகக் கொடுத்ததைக் குறிக்கின்றது. |
| சிற்பங்கள் | மூலவர் சந்திரபிரபா தீர்த்தங்கரர் குஷ்மாண்டணி தேவி (தர்மதேவி) வர்த்தமான மகாவீரர் , ரிஷப தீர்த்தங்கரர் (ஆதிநாதர்) நிபக்ஷாயக்ஷிகள் (5 இறைவன் புகழ் பாடிய புலவர்கள் ) தூணில் மகாவீரரின் உருவமும், புளியம்மை என்ற பெண்ணின் உருவமும் காணப்படுகின்றன. இவ்விரு உருவங்களும் சிறியன. மகாவீரரின் உருவம் யோகாசன நிலையில் அமர்ந்தபடி உள்ளது. மகாவீரருக்குக் கீழே புளியம்மை உருவம் உள்ளது. சற்றே இடதுபுறம் திரும்பிய நிலையில் அமர்ந்த நிலை. தலைமுடி வலது தோளுக்குப் பின்புறம் தொங்குகின்றது. மார்புக் கச்சை இல்லை. கைகள் அஞ்சலி செலுத்தும் நிலையில் உள்ளன. கழுத்தில் அணிகலன் உள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 800 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
சமணர்கள் கொங்கு நாட்டில் தங்கள் சமயத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் அடைந்த வெற்றியைக் குறித்து “விஜயமங்கலம் என்ற பெயரில் இவ்வூரை அமைத்திருக்கலாம். விஜயமங்கலத்தை தமிழ் மங்கையென்றும், மங்கை மாநகரென்றும் புலவர்கள் பலர் போற்றியுள்ளனர். கொங்கு நாட்டுச் சமணத்தலங்களின் மிகச்சிறப்புடையது விஜயமங்கலம். இங்கு 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சமணக்கோயில் உள்ளது. மேலும் இக்கோயிலின் கிழக்குப் பகுதியில் முடிவுறாமலிருக்கும் ஒரு சிறுகோயிலும் உள்ளது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் மிகப்பழமையானது கங்கஅரசர்களின் தளபதி சாமுண்டராயனின் தங்கை புளியம்மை என்பவளின் நிசீதிகையைக் குறிப்பது ஆகும். கொங்குச் சோழன் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்த கி.பி. 1163-ஆம் ஆண்டுக் கல்வெட்டு 'வீரசங்காதப் மலை பெரும் பள்ளி' என்று குறிப்பிடுகின்றது. சமணத் தலங்களை பள்ளி என்று அழைப்பர். இக்கோயில் சமணத் தலங்களிலேயே பெரியதானபடியால் பெரும்பள்ளி என அழைக்கப்பட்டது போலும். இங்குள்ள ஒரு கல்வெட்டு, தீர்த்தங்கரரை 'அணியாதஅழகியார்” என்று குறிப்பிடுகின்றது. விஜயமங்கலத்தில் உள்ள சமணக்கோயிலில் ஆதிநாதர் வரலாறு புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் பண்டைய ஓவியங்களும் உள்ளன.
|
|
விசயமங்கலம் சமணக் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கரிவரதராசப்பெருமாள் கோயில், நாகீசுவரர் கோயில் |
| செல்லும் வழி | கோயமுத்தூரில் இருந்து சேலம் செல்லும் நான்கு வழிச்சாலையில் விஜயமங்கலம் (பெருந்துறையில் இருந்து 12 கி.மிட்டர்)உள்ளது. அங்கிருந்து கள்ளியம்புதூர் செல்லும் சாலையில் வலதுபுறம் செல்லவேண்டும் . |
| கோவில் திறக்கும் நேரம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 93 |
| பிடித்தவை | 0 |