Back
வழிபாட்டுத் தலம்
சந்திரப்ரபா (சந்திரநாதர்) கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் சந்திரப்ரபா (சந்திரநாதர்) கோயில்
வேறு பெயர்கள் சந்திரப்ரபா தீர்த்தங்கரர் கோயில்
ஊர் திருப்பருத்திக்குன்றம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 6
மூலவர் பெயர் சந்திரநாதர்
காலம் / ஆட்சியாளர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / பல்லவ மன்னன் இராஜசிம்மன்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் சந்திரநாதர் என்னும் சமணத்தீர்த்தங்கரரின் சிற்பம் உள்ளது.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் கால கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
சுருக்கம்
திருப்பருத்திக் குன்றத்திலுள்ள திரைலோக்யநாதர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள சந்திரப்ரபா தீர்த்தங்கரர் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகும். பல்லவ மன்னனாகிய இராஜசிம்மன் (கி.பி.690-728) காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என அறியப்படுகிறது. இக்கோயில் கி.பி.8-ஆம் நூற்றாண்டிற்குரிய கட்டட கலையம்சங்களை ஆங்காங்கே கொண்டு விளங்குகிறது. இராஜசிம்மன் தன்னுடைய கைலாசநாதர் கோயிலில் முந்நூறு பட்டப்பெயர்களைக் கொண்டுள்ளான். அவன் எல்லா சமயங்களையும் ஆதரித்துள்ளான் என்பதற்கு இந்தப் பெயர்களே சாட்சியாக விளங்குகின்றன. எனவே அப்பல்லவ மன்னன் சந்திரநாதர் என்னும் சமணசமய தீர்த்தங்கரருக்கு கோயில் எடுப்பித்துள்ளான் என்பது அவனது சமயப்பொறையைக் காட்டுகிறது.
சந்திரப்ரபா (சந்திரநாதர்) கோயில்
கோயிலின் அமைப்பு சந்திரநாதர் கோயில் கருவறை, அந்தராளம், முன்மண்டபம், அதனுடன் இணைந்த உள்திருச்சுற்றாலை ஆகிய பகுதிகளைக் கொண்டதாகும். திருச்சுற்றாலைச் சுவரின் அடித்தளத்தில் ஒரு வரிசை மட்டிலும் கருங்கல்லாலும், பிறபகுதிகள் மணற் கல்லாலும் கட்டப்பட்டிருக்கின்றன. பல்லவர் காலத்துக் கட்டடக் கோயில்கள் பெரும்பாலானவற்றில் இப்பொதுத் தன்மையினைக் காணலாம். இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருப்பருத்திக்குன்றம் திரைலோக்யநாதர் கோயில்
செல்லும் வழி சென்னையிலிருந் 75 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரத்திலிருந்து திருப்பருத்திக்குன்றம் செல்லலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
சந்திரப்ரபா (சந்திரநாதர்) கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் காஞ்சிபுரம், திருப்பருத்திக்குன்றம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காஞ்சிபுரம், நத்தப்பேட்டை, வாலாஜாபாத், திருமால்புரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி காஞ்சிபுரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 228
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்