வழிபாட்டுத் தலம்
அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | ஜெயங்கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டபுரம், குலசேகரபுரம், மதுநந்திபுரம், சோழீசுவரர் கோயில் |
| ஊர் | நேமம் (நியமம்) |
| வட்டம் | திருவையாறு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | ஐராவதேசுவரர் |
| தாயார் / அம்மன் பெயர் | அலங்கார நாயகி |
| திருக்குளம் / ஆறு | சோழ தீர்த்தம் |
| திருவிழாக்கள் | பிரதோஷம், சிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / முத்தரையர்கள் |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவார வைப்புத்தலம். |
|
சுருக்கம்
நியமம் கோயில் தஞ்சை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை ஆண்டு வந்த குறுநில மன்னர்களான முத்தரையர்களால் கட்டப்பட்ட கற்றளியாகும். ஆனால் அதற்கு முன்பாக இத்தலம் தேவார காலத்தில் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும். ஞானசம்பந்தர் நெடுங்களம் வழிபட்டு, "நியமம்" வந்து தொழுது, திருக்காட்டுப்பள்ளி சென்றதாகப் பெரிய புராணத்தால் அறிகிறோம்.
|
|
அருள்மிகு ஐராவதேசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | கருவறை அகழி போன்ற அமைப்புடையது. கோயில் ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. கோயில் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. தல விநாயகர் ஆவுடையில் உள்ளார். இரு திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலில் பைரவர் மேற்கு நோக்கி உள்ளார். ஜெயங்கொண்ட விநாயகர், முருகன், விசுவநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகள் உள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | மேலைத் திருக்காட்டுப்பள்ளி, செந்தலை, திருவையாறு |
| செல்லும் வழி | மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தோகூர் சாலையில் 3 கி.மீ தொலைவில் சாலையோரத்தில் நேமம் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 -11.00 முதல் மாலை 4.00-8.30 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 04 Sep 2018 |
| பார்வைகள் | 88 |
| பிடித்தவை | 0 |