Back
வழிபாட்டுத் தலம்
பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில்
வேறு பெயர்கள் நக்கன் பரமேஸ்வரர் கோயில்
ஊர் பழுவூர்
வட்டம் குளித்தலை
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
உட்பிரிவு 1
மூலவர் பெயர் சுந்தரேஸ்வரர், நக்கன் பரமேஸ்வரர்
காலம் / ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தகச் சோழன்
கல்வெட்டு / செப்பேடு முதலாம் பராந்தகன் காலக் கல்வெட்டுகளும், கொடும்பாளுர் குறுநில மன்னன் இருக்குவேளிர் கல்வெட்டுகளும், பிற்காலப்பாண்டிய மன்னன் கோனேரின்மை கொண்டான் கல்வெட்டும் இக்கோயிலில் காணப்படுகின்றன.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறை தேவக்கோட்டங்களில் உள்ள பிரம்மா, விஷ்ணு சிற்பங்களும், துவாரபாலகர் சிற்பங்களும், கருவறை விமானத்தின் கிரீவப்பகுதியில் உள்ள நந்திகளும் முதலாம் பராந்தகன் காலத்தைச் சேர்ந்தவை. இச்சிற்பங்கள் முற்காலச் சோழர் கலைப்பாணிக்கு சான்றாகத் திகழ்கின்றன.
தலத்தின் சிறப்பு 1000 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
சுருக்கம்
பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கற்றளியாகும். தாங்குதளம் முதல் முடி வரை கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது தளங்கள் இன்றி காணப்படுகின்றது. எனவே விமானம் இன்ன பாணியென்று அறியக்கூடவில்லை. கருவறை சதுர வடிவமானது. கருவறையில் சோழர்கால இலிங்கம் அமைந்துள்ளது. அர்த்தமண்டப நுழைவு வாயிலில் துவாரபாலகர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கருவறை விமானத்தின் மூன்றுபுறமும் தேவகோட்டங்கள் அமைந்துள்ளன. அதில் வடக்கில் பிரம்மனும், மேற்கில் திருமாலும் உள்ளனர். தெற்கில் உள்ள தென்முகக் கடவுள் சிற்பம் பிற்காலத்தியது. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. தாங்குதளத்தில் உபானம், ஜகதி, குமுதம் போன்ற உறுப்புகள் அமைந்துள்ளன. கூரைப்பகுதியில் பூதவரிகள் செல்கின்றன. கருவறை தேவக்கோட்டங்களில் தெற்கில பிற்காலத்திய தென்முகக் கடவுளும், மேற்கில் முற்காலக் கலைப்பாணியான திருமாலும், வடக்கில் புராதன நான்முகனும் அமைக்கப்பட்டுள்ளனர். இக்கோயில் சிறிய, எளிய கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இருக்குவேளிர் கல்வெட்டுகளும், பிற்காலப் பாண்டியர் கோனேரின்மை கொண்டான் கல்வெட்டும் இங்கு இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் கொடுங்கைக்குக் கீழ் செல்லும் பூதவரிகள் சிறப்பானவை.
பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில்
கோயிலின் அமைப்பு பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கற்றளியாகும். தாங்குதளம் முதல் முடி வரை கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது தளங்கள் இன்றி காணப்படுகின்றது. எனவே விமானம் இன்ன பாணியென்று அறியக்கூடவில்லை. கருவறை சதுர வடிவமானது. கருவறையில் சோழர்கால இலிங்கம் அமைந்துள்ளது. அர்த்தமண்டப நுழைவு வாயிலில் துவாரபாலகர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கருவறை விமானத்தின் மூன்றுபுறமும் தேவகோட்டங்கள் அமைந்துள்ளன. அதில் வடக்கில் பிரம்மனும், மேற்கில் திருமாலும் உள்ளனர். தெற்கில் உள்ள தென்முகக் கடவுள் சிற்பம் பிற்காலத்தியது. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. தாங்குதளத்தில் உபானம், ஜகதி, குமுதம் போன்ற உறுப்புகள் அமைந்துள்ளன. கூரைப்பகுதியில் பூதவரிகள் செல்கின்றன.
பாதுகாக்கும் நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் கோபுரப்பட்டி சிவன் கோயில், ஆலம்பாக்கம் கைலாசநாதர் கோயில், துடையூர், பெருங்குடி அகஸ்தீஸ்வரர் கோயில், பாச்சில் அமலேஸ்வரர் கோயில்
செல்லும் வழி சென்னையிலிருந்து 316 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் குளித்தலை செல்லும் சாலையில் பழுவூர் உள்ளது. பழுவூரில் சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருச்சி, குளித்தலை, பழுவூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி திருச்சி விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 50
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்