வழிபாட்டுத் தலம்
ஜார்ஜ் கோட்டை புனித மேரி தேவாலயம்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | ஜார்ஜ் கோட்டை புனித மேரி தேவாலயம் |
|---|---|
| வேறு பெயர்கள் | புனித மேரி தேவாலயம் |
| ஊர் | ஜார்ஜ் கோட்டை |
| வட்டம் | அடையாறு |
| மாவட்டம் | சென்னை |
| உட்பிரிவு | 8 |
| தலமரம் | கிறிஸ்துமஸ் மரம் |
| ஆகமம் | வேதாகமம் |
| திருவிழாக்கள் | கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு |
| காலம் / ஆட்சியாளர் | கி. பி. 1680 |
| சுவரோவியங்கள் | உள்ளே அமைந்துள்ள ஓவியங்கள் பல. அவற்றில் பெயர் தெரியாத ஓவியரால் உருவாக்கப்பட்ட ‘கடைசி இரவு உணவு’ ஓவியம் நெஞ்சை அள்ளக்கூடியது. |
| தலத்தின் சிறப்பு | 300 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
புனித மேரி கிறித்தவ ஆலயம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தென்பகுதியில் காணப்படும் மிகத் தொன்மையான கிறித்தவ ஆலயம் ஆகும். ஆங்கிலத் திருச்சபையினருக்குரிய ஆலயங்களில் இந்தியாவில் முதன்முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாகும். கி. பி. 1680 இல் கிழக்கிந்திய கம்பெனியாரால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது. இவ்வாலயத்தில் இறந்த பல ஆங்கிலேயர்களின் நினைவாகப் பல பதிப்புக் கற்பலகைகள் உள்ளன. புனித மேரி ஆலயத்தினுள் இங்கிலாந்து நாட்டுச் சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டும் பல சலவைக்கல் சிற்பங்கள் உள்ளன. இவை அரிய கலைப்படைப்புகளாகும். இவ்வாலயத்தில் தான் இராபர்ட் கிளைவ் மற்றும் ஆளுநர் எலிஹுஹேல் என்பவர்களின் திருமணம் நடைபெற்றது.
|
|
ஜார்ஜ் கோட்டை புனித மேரி தேவாலயம்
| கோயிலின் அமைப்பு | சென்னை செயின் ஜார்ஜ் கோட்டையிலுள்ள செயின்ட் மேரி தேவாலயம் குண்டுகளால் சிதைக்கப்பட முடியாத கட்டிட அமைப்பைக்கொண்டது. இதன் மேற்பூச்சு பளபளப்பாக அமைந்துள்ளது. கட்டப்பட்ட மூல வடிவத்துடன் ஒட்டிப் பிற்காலத்தில் கட்டிடம் வளர்க்கப்பட்டது. நடுவிலுள்ள கோபுரம், ஆடைகள் வைப்பதற்கான அறை, புனித அறை, பிறபக்கக்கோபுரங்கள், கூர்மையான கோபுரம் ஆகியன கட்டப்பட்டன. ஆலயத்தின் உட்புறம் மரவேலைப்பாடுகளையும் கண்ணாடி வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | சென்னை உயர் மறை மாவட்ட திருச்சபை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சாந்தோம் தேவாலயம், சாந்தோர் புனித மேரி தேவாலயம், லஸ் சர்ச் |
| செல்லும் வழி | சென்னை எழும்பூர் இரயில் நிலையிலிருந்து புறநகர் இரயில் மூலம் சென்னைக் கோட்டையை அடையலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 9.00 மணி முதல் பிற்பகல் 5:30 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 38 |
| பிடித்தவை | 0 |