வழிபாட்டுத் தலம்
ஸ்ரீபாண்டி முனிசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் ஸ்ரீபாண்டி முனிசுவரர் கோயில்
வேறு பெயர்கள் பாண்டி கோயில்
ஊர் மதுரை
வட்டம் மதுரை தெற்கு
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு மேலமடை கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் பாண்டி முனீசுவரர் கோயிலில் பாண்டி முனீசுவரர் கருவறையில் தியான கோலத்தில் அமர்ந்துள்ளார். சமய கருப்புசாமி என்ற கருப்பசாமி காவல் தெய்வமாக இங்கு வழிபடப்படுகின்றது. மேலும் விநாயகர், சுப்பிரமணியர், ஆண்டிச்சாமி ஆகிய தெய்வங்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன.
தலத்தின் சிறப்பு மதுரை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள முனீசுவரர் கோயில்களில் மிகவும் முதன்மையானது. மதுரையை ஆண்டு பாண்டிய மன்னனே இங்கு முனீசுவரராக அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது.
சுருக்கம்
பாண்டிய மன்னரே இங்கு முனீசுவரராக வழிபடப்படுவதாக தொன் நம்பிக்கை. கோயிலுக்கு வருபவர்கள், முதலில் விநாயகரை வழிபட்டு பின்னர் பாண்டி முனீசுவரரை வழிபடுகின்றனர். இங்குள்ள பாண்டி முனீசுவரர் புலால் உண்ணாதவர். ஆகையால், அவருக்கு வெண்ணாடை சார்த்தி, பால், மணமிகு தைலம், சந்தனம், சவ்வாது, சர்க்கரையில்லா பொங்கல், பழங்கள் மற்றும் தேங்காய் போன்றவைகளைக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். மேலும் இங்குள்ள சமய கருப்பசாமிக்கு, ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் சாராயம், சுருட்டு போன்றவைகளை படைத்தும் வழிபடுகின்றனர்.
ஸ்ரீபாண்டி முனிசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு பாண்டி முனீசுவரர் கோயில் வளாகம் பரந்த பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மக்கள் திருவிழா கூட்டம் போன்று கூடுவர். பொங்கல் படைத்தல், பலியிடுதல் போன்றவை நடைபெறுவதற்காக இப்பரந்த பரப்பு இன்றியமையாததாகிறது. தோரணவாயிலில் சிற்பங்களுடன் கூடிய முகப்பைப் பெற்று இக்கோயில் விளங்குகிறது. கருவறை விமானம் முழுவதும் செங்கல் சுதைப் பணியாகவே உள்ளது. விமானம் இரண்டு தளங்களைக் கொண்டதாக விளங்குகிறது. கருவறையின் மையப்பகுதியில் பாண்டி முனீசுவரர் விளங்குகிறார். கோயில் திருச்சுற்றில் கருப்பசாமியும், ஆண்டிச்சாமியும், விநாயகரும், சுப்பிரமணியரும் சிறு சிறு சந்நிதிகளில் வழிபாட்டில் உள்ளனர்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் யானைமலை தமிழ்-பிராமிக் கல்வெட்டு குகைத்தளம், இலாடன் கோயில், நரசிம்மர் குடைவரை
செல்லும் வழி மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து இராமேசுவரம், சிவகங்கை, மானாமதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராஜபாளையம் நோக்கி செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் புறநகர் பேருந்துகளும், பாண்டி கோயில் வாசலில் நின்று செல்லும்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
ஸ்ரீபாண்டி முனிசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் பாண்டி கோவில்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் கிருஷ்ணா சத்யநாராயணன், கோபி நல்லையன், ஜெயபால், மோகன்ராஜ், பரிசெல்வம், பிரேம்நாத்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 44
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்