வழிபாட்டுத் தலம்
ஸ்ரீமடைக்கருப்பர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் ஸ்ரீமடைக்கருப்பர் கோயில்
வேறு பெயர்கள் கருப்பர் கோயில்
ஊர் ஆலம்பட்டி
வட்டம் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு ஆலம்பட்டி மடை
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பொ.ஆ.1971
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் மடைக்கருப்பர் கோயிலின் முதன்மை தெய்வமாக கருப்பசாமி வழிபடப்பெறுகிறார். கருப்பசாமி நின்றநிலையில், ஒரு கையில் அரிவாளை ஓங்கிய படியும், மற்றொரு கையில் சுக்குமாந்தடியை நிலத்தில் ஊன்றியவாறும், ஆங்காரமாய் காட்சியளிப்பார்.
தலத்தின் சிறப்பு நீர்நிலையை காக்கும் தெய்வமாக விளங்குகிறார். ஊரில் உள்ள மடைக்கு காவலாக விளங்குகிறார்.
சுருக்கம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீமடைகருப்பர் கோயில் 1971-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. எனினும் இவ்வூரில் மடைகருப்பர் வழிபாடு ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்துள்ளது. ஊரையும், ஊரின் நீர்நிலையான மடையையும் இக்கருப்பசாமி காவல் காப்பதால் ஸ்ரீமடைக்கருப்பசாமி என்றழைக்கப்படுகிறார்.
ஸ்ரீமடைக்கருப்பர் கோயில்
கோயிலின் அமைப்பு ஆலம்பட்டி மடையின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. 1971-இல் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் முழுவதும் செங்கல் மற்றும் மணல் பூச்சுகளால் விளங்கிட, தற்காலக் கட்டிடமாய் காட்சியளிக்கிறது. கருப்பர் கோயிலில் கருப்பசாமி சன்னதியின் எதிர்புறம் பரந்த வெளி காணப்படுகிறது. சாலையோரத்தில் ஏகாந்தமாய் இக்கோயில் எழிலுடன் விளங்குகிறது.
பாதுகாக்கும் நிறுவனம் ஊர் நிர்வாகம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் அய்யனார் கோயில், குரு இரவி தாதா கோயில்
செல்லும் வழி திருமங்கலத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் ஆலம்பட்டி அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து கொல்லம் செல்லும் நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்துகள் இங்கு நிற்கும்.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
ஸ்ரீமடைக்கருப்பர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் ஆலம்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி திருமங்கலம், மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் செல்வமணி அழகன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 51
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்