Back
வழிபாட்டுத் தலம்
திருச்சிறுபுலியூர் அருமாகடல் பெருமாள் கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருச்சிறுபுலியூர் அருமாகடல் பெருமாள் கோவில்
வேறு பெயர்கள் பாலவியாக்ரபுரி
ஊர் திருச்சிறுபுலியூர்
வட்டம் மயிலாடுதுறை
மாவட்டம் தஞ்சாவூர்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் சலசயனப்பெருமாள்
தாயார் / அம்மன் பெயர் திருமாமகள் நாச்சியார், தயாநாயகி
திருக்குளம் / ஆறு மானஸ புஷ்கரிணி
ஆகமம் பாஞ்சராத்திரம்
திருவிழாக்கள் பங்குனி உத்திரம், தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி, உறியடி உற்சவம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பாண்டிய மற்றும் விசயநகர நாயக்கர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் ராஜகோபுரத்துக்கு அடியிலேயே பால ஆஞ்சநேயர், இடது பக்கம் ஆண்டாள் சந்நதி. இந்த ஆண்டாளுக்கு அருகில் பக்த அனுமன் விநயத்தோடு காட்சியளிக்கிறார். இவர்களுக்கு எதிரே யாகசாலையும் ஆழ்வார்கள் சந்நதியும் அமைந்துள்ளன. மஹாவிஷ்ணு விக்ரகங்கள் கோஷ்ட தெய்வங்களாகப் பரிமளிக்கின்றன. கூடவே விஷ்ணு துர்க்கை. தாயார் திருமாமகள் நாச்சியார் தனிச் சந்நதியில் அமர்ந்து அருள் பரிபாலிக்கிறார். இவரது உற்சவர் தயாநாயகி என்ற பெயரில் கருணையின் மொத்த உருவமாகத் திகழ்கிறார். பூமிக்குக் கீழே கருடன் தனி சந்நதியில் விளங்குகிறார். ஆதிசேஷனோ, ஆனந்த புஷ்கரணியின் கரையில் எழுந்தருளியிருக்கிறார்.
தலத்தின் சிறப்பு 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருத்தலம்.
சுருக்கம்
வியாசர் மற்றும் வியாக்ரபாதருக்கு பெருமாள் காட்சியளித்த திருத்தலம். தெற்கே திருமுக மண்டலம், புஜங்க சயனம். புஜங்கசயனத்தில் மிகச்சிறிய உருவமாயிருந்ததைக் கண்டு திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட, உமது குறைதீர நமது மிகப்பெரிய உருவை திருக்கண்ணமங்கையில் காணும் என்று பெருமாள் அருளிச் செய்த ஸ்தலம். கருடனுக்கு அபயமளித்த இடம். இங்கு பூமிக்கு கீழ் கருடனுக்கு சன்னதியும், மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேடனுக்கும் சன்னதி உள்ளது. கருடா சௌக்கியமா என்று கேட்டதற்கு அவரவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்கியம் என்று சொல்லப்பட்ட ஸ்தலம். ஸ்ரீரங்கத்தைப் போன்றே தெற்கு நோக்கிய சயனம். திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களாசாசனம். நாகதோஷம் நிவர்த்தியும் புத்திர சந்தான விருத்தியும் இத்தலத்திற்கு ஏற்பட்ட தனி மகத்துவம். இத்தலத்தின் பெருமானை பூஜித்து வைகுண்டம் அடைந்த வியக்ர பாதரை பெருமாளின் திருவடிகளுக்கு அருகிலேயே பிரதிட்டை செய்துள்ளனர். அவருக்கும் இங்கு வழிபாடுகள் நடக்கின்றன.
திருச்சிறுபுலியூர் அருமாகடல் பெருமாள் கோவில்
கோயிலின் அமைப்பு உயர்ந்த இராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் காணப்படுகின்றது. ராஜகோபுரத்துக்கு அடியிலேயே பால ஆஞ்சநேயர், இடது புறம் ஆண்டாள் சந்நதி. இந்த ஆண்டாளுக்கு அருகில் பக்த அனுமன் விநயத்தோடு காட்சியளிக்கிறார். இவர்களுக்கு எதிரே யாகசாலையும் ஆழ்வார் கள் திருமுன்களும் அமைந்துள்ளன. நந்தவர்த்தனம் என்னும் விமானத்தின் கருவறையில் பெருமாள் சலசயனராக காட்சியளிக்கிறார். மூலவரை தரிசித்துவிட்டு கருவறையை வலம் வந்தால், விநாயகரையும் அவர் முன் பலிபீடத்தையும் காணலாம். தொடர்ந்தால், ஒவ்வொரு திக்கை நோக்கியபடியும் அடுத்தடுத்து பெருமாள் திருவுருவங்கள் கோட்டத் தெய்வங்களாகப் பரிமளிக்கின்றன. கூடவே விஷ்ணு துர்க்கை. தாயார் திருமாமகள் நாச்சியார் தனித் திருமுன்களில் அமர்ந்து அருள் பரிபாலிக்கிறார். இவரது உற்சவர் தயாநாயகி என்ற பெயரில் கருணையின் மொத்த உருவமாகத் திகழ்கிறார். பூமிக்குக் கீழே கருடன் தனி சந்நதியில் விளங்குகிறார்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் சிறுபுலியூர் அய்யனார் கோயில், அனந்தாழ்வார் கோயில்
செல்லும் வழி இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து (மாயவரம்) நகரப்பேருந்தில் ஏறிச்சென்று கொல்லுமாங்குடி என்ற சிற்றூரில் இறங்கி 2 மைல் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை-பேரளம்-திருவாரூர் பாதையில் கொல்லுமங்குடி என்ற ஊரிலிருந்து இடப்புறமாக 3 கி.மீ. பயணம் செய்தால் திருச்சிறுபுலியூரை அடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 -12.00 முதல் மாலை 5.00-8.00 வரை
திருச்சிறுபுலியூர் அருமாகடல் பெருமாள் கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் கொல்லுமாங்குடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி மயிலாடுதுறை, கும்பகோணம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 Jul 2017
பார்வைகள் 29
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்