வழிபாட்டுத் தலம்
திருப்பூவணநாதர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருப்பூவணநாதர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | நெல்முடிக்கரை, புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் |
| ஊர் | திருப்புவனம் |
| வட்டம் | மானாமதுரை |
| மாவட்டம் | சிவகங்கை |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | அழகியநாயகி, சௌந்தரநாயகி, மின்னனையாள் |
| தலமரம் | பலா |
| திருக்குளம் / ஆறு | வைகை |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | பங்குனிப் பெருவிழா, தை மற்றும் ஆடி அமாவாசை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பிற்காலப் பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | கோனேரின்மைகொண்டான் குலசேகரதேவன் காலத்திய கல்வெட்டுக்கள் இத்தலத்திற்கு வேதபாராயணத்திற்கும், விழாக்களுக்கும் நிவந்தங்கள் அளித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இங்குள்ள நடராசமூர்த்தம் அற்புதமான வேலைப்பாடுடையது- பெரியது- அழகு மிக்கது. மூலவர் - சிவலிங்கத் திருமேனி கோயிலில் பொன்னனையாள், சித்தர் ஆகியோர் உருவங்கள் உள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
பாண்டிய நாட்டுத் தலங்களுள் மூவர் பாடலும் பெற்றது. இவ்வூர் (1) பழையூர் (2) புதூர் (3) கோட்டை (4) நெல் முடிக்கரை என நான்கு பகுதிகளாகவுள்ளது. இவற்றுள் ‘கோட்டை’ எனும் பகுதியில் திருக்கோயில் உள்ளது. குலசேகர பாண்டியன் இந்நகரில் முடிசூட்டிக் கொண்ட விழாவில் நெற்கதிரை முடியாகச் சூடிக்கொண்டான். எனவே இத்தலத்திற்கு நெல்முடிக்கரை என்ற பெயருண்டாயிற்று. வேறு பெயர்கள்:- புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் என்பன. பொன்னனையாள் என்பவள் வாழ்ந்து சிவனடியார்களை உபசரித்த தலம். இவளுக்காக இறைவன் மகிழ்ந்து இரசவாதம் செய்த திருவிளையாடல் இத்தலத்தில் நிகழ்ந்ததே. இக்கோயிலில் உள்ள கொடுங்கைகள் மிகவும் அழகானவை. பிரமன் வழிபட்ட பதி. வைகைக்கரையில் கோயில். இங்கு வைகையாறு வடக்கு நோக்கி - உத்தரவாகினியாகப் பாய்கிறது. எனவே இவ்விடம் மிகவும் விசேஷமானதாகும். இறந்தோரின் எலும்புகளை இங்குப் புதைப்பதால் அவர்கள் மேலான நற்கதியைப் பெறுகிறார்கள் என்பது மரபு. மூவர் பெருமக்களுக்கும் வைகை மணல் சிவலிங்கமாகத் தோன்றியமையால் மூவரும் மறுகரையிலிருந்தே - இத்தலத்தை மிதிக்க அஞ்சி- வணங்க, இறைவன் அவர்கள் தம்மை நேரே கண்டு வணங்குவதற்கு ஏதுவாக நந்தியை விலகச் செய்தருளினார் என்பது வரலாறு. இதனால் நந்தி சாய்ந்துள்ளதைக் காணலாம். வைகையின் மறுகரையிலிருந்து அவர்கள் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. (பழைய மண்டபம்) திருவாசகத்திலும், கருவூர்த்தேவரின் திருவிசைப்பாவிலும் இத்தலம் புகழப்படுகிறது. மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கை. திருவேங்கடத்து எம்பெருமானையே ஈண்டு கண்டதாக திருமங்கை மங்களாசாசனம் செய்துள்ளார். வைணவ சம்பிரதாயத்தில் பாஷ்யகார சித்தாந்தம் என்பதைப் போதித்த மாமேதை ஸ்ரீஸ்வாமி தேசிகன் இங்குதான் அவதரித்தார். அதாவது (இத்தலம்) தூப்புல் என்னும் பகுதியே அவரது அவதார ஸ்தலமாகும்.
|
|
திருப்பூவணநாதர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயிலில் உள்ள கொடுங்கைகள் மிகவும் அழகானவை. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | நரிக்குடி சிவன் கோயில், மானாமதுரை சிவன் கோயில், பூம்பிடாகை அம்மன் கோயில் |
| செல்லும் வழி | இத்தலத்திற்கு மதுரையிலிருந்து செல்லலாம். இத்தலம் மதுரை- மானாமதுரை பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
13 Files
-
TVA_TEM_000185/TVA_TEM_000185_தà®...
-
TVA_TEM_000185/TVA_TEM_000185_தà®...
-
TVA_TEM_000185/TVA_TEM_000185_தà®...
-
TVA_TEM_000185/TVA_TEM_000185_தà®...
-
TVA_TEM_000185/TVA_TEM_000185_தà®...
-
TVA_TEM_000185/TVA_TEM_000185_தà®...
-
TVA_TEM_000185/TVA_TEM_000185_தà®...
-
TVA_TEM_000185/TVA_TEM_000185_தà®...
-
TVA_TEM_000185/TVA_TEM_000185_தà®...
-
TVA_TEM_000185/TVA_TEM_000185_தà®...
-
TVA_TEM_000185/TVA_TEM_000185_தà®...
-
TVA_TEM_000185/TVA_TEM_000185_தà®...
-
TVA_TEM_000185/TVA_TEM_000185_தà®...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 23 Nov 2018 |
| பார்வைகள் | 256 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 9 |