Back
வழிபாட்டுத் தலம்
திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோயில்
வேறு பெயர்கள் கல்யாண மாநகர், புன்னாகவனம்
ஊர் திருப்புறம்பியம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
தொலைபேசி +91 435 2459519, 2459715, 94446 26632, 99523 23429
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் கரும்பன்ன சொல்லம்மை
தலமரம் புன்னை
திருக்குளம் / ஆறு பிரம்ம தீர்த்தம்.
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் ஆவணி – விநாயகர் சதுர்த்தி 5 தினங்கள் சிறப்பு வழிபாடு, மாசி மகத்தில் பிரம்மோற்சவம், கார்த்திகைத் திருநாள்
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முதலாம் ஆதித்த சோழன்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் காணப்படுகிறார். கருவறை விமானத்தின் சுற்றுச் சுவர்களில் அமைந்துள்ள தேவகோட்டங்களில் பிட்சாடனர், கணபதி, தென்முகக்கடவுள், மகிடமர்த்தினி ஆகிய அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய சிற்பங்களைக் காணலாம். ஆனால் எண்ணற்ற சிற்பங்கள் பின்னப்பட்டுள்ளது. கரும்பன்ன சொல்லம்மை தனித் திருமுன் கொண்டு நின்ற நிலையில் உள்ளார்.
தலத்தின் சிறப்பு 1100 ஆண்டுகள் பழமையானது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். சோழர் காலக் கற்றளி.
சுருக்கம்
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 46-வது தலம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. முதலாம் ஆதித்த சோழன் இப்பாடல் பெற்ற தலத்தை கற்றளியாக மாற்றியதாக வரலாறு. இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகர் வழிபாடு சிறப்பானது. தென்முகக்கடவுளின் 24 முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். அகத்தியர், பிரமன், சனகாதி முனிவர்கள் நால்வர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட தலம் என்பதாக தலபுராணம் கூறுகிறது. இக்கோயில் மதுரை திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதீனத்திற்கு சொந்தமானது.
திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறது. கோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடி கொண்டுள்ளார். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றவுடன் பரந்த கிழக்கு வெளிச்சுற்று காணப்படுகிறது. அதற்கு நேரே பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. நந்தி மண்டபத்தின் விமானத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சுதை சிற்பங்களைக் காணலாம். முதற்திருச்சுற்றில் நால்வர், அகத்தியர், புலத்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட இலிங்கங்கள் முதலியவை உள்ளன. இரண்டாம் திருச்சுற்றில் கரும்பன்ன சொல்லம்மையின் திருமுன் காணப்படுகின்றது. குளத்தின் தென்கரையில் தென்முகக்கடவுளுக்கு கோயில் உள்ளது. இதற்கு மேலே சட்டைநாதர் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது..
பாதுகாக்கும் நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில், கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில், திருநீலக்குடி, திருக்கோழம்பியம்
செல்லும் வழி கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மி. தொலைவிலுள்ள இன்னம்பர் திருத்தலத்தை அடுத்து அதே சாலையில் மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 11 கி.மி. தொலைவிலுள்ள திருப்புறம்பியம் செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருப்புறம்பியம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி கும்பகோணம் வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 138
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்