Back
வழிபாட்டுத் தலம்
இராமலிங்கசுவாமி கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் இராமலிங்கசுவாமி கோவில்
வேறு பெயர்கள் இராமேஸ்வரம், இராமநாதர் கோயில், இராமநாதசுவாமி கோயில்
ஊர் இராமேஸ்வரம்
வட்டம் இராமேஸ்வரம்
மாவட்டம் இராமநாதபுரம்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் இராமநாதசுவாமி, இராமலிங்கேஸ்வரர்
தாயார் / அம்மன் பெயர் பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி
தலமரம் பலா, ஆலமரம்
திருக்குளம் / ஆறு 22 தீர்த்தங்கள்
ஆகமம் சிவாகமம்
வழிபாடு ஆறுகால பூசை
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை
காலம் / ஆட்சியாளர் கி.பி.6-ஆம் நூற்றாண்டு / பாண்டியர், சேதுபதி
தலத்தின் சிறப்பு தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். முக்தித் தலங்களில் ஒன்று. இத்தலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
சுருக்கம்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி. ‘காசி - இராமேஸ்வரம்’ என்னும் பேச்சு வழக்கிலிருந்து இத்தலத்தின் மேன்மையை அறியலாம். வாழ்நாளில் ஒவ்வொருவரும் இவ்யாத்திரையைத் தவறாமல் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு செல்வோர் முதலில் இராமேஸ்வரம் வந்து கடல் நீராடி இராமநாதரைத் தொழுது, இங்கிருந்து (கடல்) மண்ணையெடுத்துக் கொண்டு – காசி சென்று, கங்கையிற்கரைத்து, கங்கையில் நீராடி விசுவநாதரைத் தொழுது கங்கை நீருடன் திரும்பவும் இராமேஸ்வரம் வந்து இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வணங்கியே யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே முறையானது.
இராமலிங்கசுவாமி கோவில்
கோயிலின் அமைப்பு தென்னிந்திய கோயில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை, தேவிப்பட்டினம், நாகநாதர் கோயில், இராமநாதபுரம் அரண்மனை, தனுஷ்கோடி, சேதுபாலம், பாம்பன்பாலம்
செல்லும் வழி மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து 161 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 -12.30 முதல் மாலை 5.00-8.30 வரை
இராமலிங்கசுவாமி கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் இராமேஸ்வரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் இராமேஸ்வரம்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி இராமேஸ்வரம் தேவஸ்தானம் கோயில் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 11 May 2018
பார்வைகள் 252
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்