வழிபாட்டுத் தலம்
மொட்டையரசு முனியாண்டி கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் மொட்டையரசு முனியாண்டி கோயில்
வேறு பெயர்கள் முனியாண்டி கோயில்
ஊர் திருப்பரங்குன்றம்
வட்டம் மதுரை மேற்கு
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு சரவணப் பொய்கை
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள மொட்டையரசு முனியாண்டி கோயிலில் மூன்று சிற்பங்கள் உள்ளன. நடுவில் உள்ள முதன்மை தெய்வமாக மொட்டையரசு தாடி மீசையுடன் தவக்கோலத்தில் காணப்படுகிறார். இச்சிற்பம் மகரத்தோரணத்தின் நடுவே அமைக்கப்பட்டு முதன்மைச் சிற்பமாகக் காட்டப்படுகிறது. இச்சிற்பத்திற்கு வலப்புறத்தில் மற்றுமொரு தவக்கோலத்தில் முனீசுவரர் விளங்குகிறார். இச்சிற்பத்திற்கு காவி உடை உடுத்தப்பட்டுள்ளது.
தலத்தின் சிறப்பு முனீசுவரர்களுக்கு உருவம் அமைத்தல் மிகவும் அரிது. இங்கு முனியாண்டி மற்றும் மொட்டையரசு தெய்வத்திற்கு உருவ வழிபாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மொட்டையரசு முனியாண்டி கோயில்
கோயிலின் அமைப்பு மொட்டையரசு மற்றும் முனியாண்டி கோயில் திறந்த வெளியில் மரத்தினடியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கல்மேடையின் மீது உருவங்களை மட்டும் வைத்து வழிபடுவதாய் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர கோயில் கட்டுமான அமைப்பு என்பதாக ஒன்றும் காணப்படவில்லை. கல் மேடை படிக்கட்டுகளுடன் கூடியது. கல்மேடையின் மீது பீடம் அமைக்கப்பட்டு, பீடத்தின் மீது திருவுருவங்கள் உள்ளன. நடுவில் மையமாக உள்ள சிற்பம் முதன்மை தெய்வமாகக் கருதப்படுவதால் மகரத் தோரணம் காட்டப்பட்டுள்ளது. இருபுறமும் உள்ள மற்ற இரு சிற்பங்களும் வெளியிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் தனியார்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோயில், தென்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் தமிழ்-பிராமிக் கல்வெட்டு
செல்லும் வழி
கோவில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
மொட்டையரசு முனியாண்டி கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழரசன், செல்வப்ரசாந்த்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 27
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்