வழிபாட்டுத் தலம்
வண்டியூர் அய்யனார் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | வண்டியூர் அய்யனார் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | அய்யனார் கோயில் |
| ஊர் | வண்டியூர் |
| வட்டம் | மதுரை |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | வண்டியூர் கண்மாய் |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் அய்யனார் பூரணை, புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அய்யனார் இத்தலத்தில் கரந்தைமலை அய்யனார் என அழைக்கப்படுகிறார். கருவறையின் எதிரே பலிபீடம் மற்றும் யானை வாகனம் கற்சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. கோயில் திருச்சுற்றில் காவல் தெய்வமாக அய்யனார் வெண்புரவியில் வீற்றிருக்கிறார். குதிரையின் முன்னங்கால்கள் இரண்டு பூதகணத்தாரின் தலையில் வைக்கப்பட்டுள்ளன. குதிரையின் ஒருபுறம் இராமன், சீதை, இலக்குவன் ஆகியோர் சுதைச் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளனர். மற்றொருபுறம் ஆடல் பாடல் கலைநிகழ்வு சிற்பமாக்கப்பட்டுள்ளது. விநாயகர் தனி சன்னிதியில் உள்ளார். வீரர் ஒருவரின் நின்ற நிலை சிற்பம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அருகே வணங்கியபடி ஒரு தொண்டர் காணப்படுகிறார். வீரபத்திரர், பத்திரகாளி, கருப்பசாமி ஆகிய தெய்வங்களின் சுதை வடிவங்கள் தனித்தனியே சிறு சன்னதிகளில் வைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன. |
| தலத்தின் சிறப்பு | நீர்நிலையை காக்கும் தெய்வமாக விளங்குகிறார். ஊரில் உள்ள மடைக்கு காவலாக விளங்குகிறார். |
|
சுருக்கம்
மதுரை நகரில் உள்ள வண்டியூர்
|
|
வண்டியூர் அய்யனார் கோயில்
| கோயிலின் அமைப்பு | அய்யனார் கோயில் தற்காலத்தில் புனரமைத்துக் கட்டப்பட்டுள்ளது. பல வண்ணங்களுடன் கூடிய அழகிய திருக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. அய்யனாரின் கருவறையும் முன் மண்டபமும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. தற்காலத்தில் எடுப்பிக்கப்பட்ட அய்யனார் புரவியில் அமர்ந்துள்ள சிற்பம் வண்ணந்தீட்டப்பட்டதாயும், பெரிய அளவினதாயும் காட்சியளிக்கிறது. கோயில் வளாகம் கண்மாய் கரையோரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | வண்டியூர் மாரியம்மன் கோயில், வண்டியூர் தெப்பக்குளம், காலபைரவர் கோயில், சிவன் கோயில், வண்டியூர் சமய கருப்பணசாமி கோயில் |
| செல்லும் வழி | மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வண்டியூருக்கு பேருந்துகள் செல்கின்றன. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
வண்டியூர் அய்யனார் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | வண்டியூர் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | மதுரை |
| அருகிலுள்ள விமான நிலையம் | மதுரை |
| தங்கும் வசதி | மதுரை நகர விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | பொன்னழகு முத்துகணபதி, பாலச்சந்திரன், சுப்பையா சுப்பிரமணியன், வெங்கடாசலம், விக்கி, விக்னேஷ்வரன், விசு |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 38 |
| பிடித்தவை | 0 |