வழிபாட்டுத் தலம்
ஓமாம்புலியூர் வியாக்ரபுரீசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | ஓமாம்புலியூர் வியாக்ரபுரீசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர் கோயில், உமாப்புலியூர், திருவோமாம் புலியூர் |
| ஊர் | ஓமாம்புலியூர் |
| வட்டம் | காட்டுமன்னார்குடி |
| மாவட்டம் | கடலூர் |
| தொலைபேசி | 04144-264845 |
| உட்பிரிவு | 1 |
| தாயார் / அம்மன் பெயர் | பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை |
| தலமரம் | வதரி (இலந்தை) |
| திருக்குளம் / ஆறு | கொள்ளிடம், கௌரி தீர்த்தம் |
| வழிபாடு | மூன்று கால பூசை |
| திருவிழாக்கள் | மகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை. |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள் |
| கல்வெட்டு / செப்பேடு | சோழர் காலக் கல்வெட்டு ஒன்றும், பல்லவர்கள் காலத்தவை ஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் 'வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேத மங்கலம் ' என்றும்; இறைவன் பெயர் 'வடதளி உடையார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் இலிங்க வடிவில் இறைவன் காட்சி தருகின்றார். மூலவர் கருவறையின் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சக்கராயுதமூர்த்தி சிற்பமும், மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் சிற்பங்களாக செதுக்கப் பட்டுள்ளன. மூலவர் கருவறை விமானத்தின் தேவகோட்டத்தில் தென்முகக் கடவுள், மேற்குப்புறம் இலிங்கோத்பவர், வடபுறத்தில் நான்முகன் ஆகிய சிற்பங்களும், அர்த்தமண்டபக் கோட்டத்தில் ஆடல்வல்லான், விநாயகர், துர்க்கை ஆகிய சிற்பங்களும் காணப்படுகின்றன. மகாமண்டபத்தில் ஞானகுருவாக தென்முகக்கடவுள் சிற்பம் உள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. சம்பந்தர், அப்பர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 31ஆவது தலமாகும். |
|
சுருக்கம்
பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுன்ற இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் சம்பந்தர், அப்பர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 31-ஆவது தலமாகும். ஞானசம்பந்தர் பதிகத்தில் இத்தலம் "ஓமமாம்புலியூர்" என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் அப்பர் பாடலில் "ஓமாம்புலியூர்" என்று மருவி வருகிறது. இருவரும் தங்கள் பதிகங்களில் இத்தலத்தை வடதளி என்றும் கூறிப்பிட்டுள்ளனர். இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகச்சிறப்புடையவர். இத்தலத்திலுள்ள இறைவன் பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி என்றழைக்கப்படுகிறார். இத்தலத் தீர்த்தம் கொள்ளிடம் மற்றும் கௌரி தீர்த்தமாகும். இத்தலத்தின் மரம் வதரி (இலந்தை) ஆகும்.
|
|
ஓமாம்புலியூர் வியாக்ரபுரீசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | கிழக்கு நோக்கிய இக்கோயில் மதிற்சுவருடன் கூடிய வாயிலுடன் அமைந்துள்ளது. வாயிலுக்கு எதிரில் கௌரி தீர்த்தம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம்.. அடுத்துள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. மகாமண்டபத் திருச்சுற்றில் ஆறுமுகப் பெருமான் தனி கருவறை உள்ளது. வலம் முடித்து உட்சென்றால் நேரே மூலவர் கருவறை காணப்படுகின்றது. தெற்கு நோக்கி அம்மன் கருவறை தனித்து காணப்படுகிறது. மகாமண்டபத்தில் ஞானகுரு தட்சிணாமூர்த்தி தனி கருவறை விமானம் அமைக்கப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில், கீழக்கடம்பூர் ருத்திராபதீசுவரர் கோயில், காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோயில் |
| செல்லும் வழி | சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் பேருந்து வசதியுள்ளது. சிதம்பரத்தில் இருந்து சுமார் 31 கி.மீ. தொலைவு. காட்டுமன்னார்குடியிலிருந்து சுமார் 7 கி.மீ.தொலைவு. சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி, மோவூர் வழியாக அணைக்கரை செல்லும் நகரப் பேருந்து எண் 41 இத்தலம் வழியாகச் செல்கிறது. கோவில் வாயிலில் இறங்கிக் கொள்ளலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 07.00 முதல் 11.30 வரை மாலை 05.30 முதல் 07.30 வரை |
ஓமாம்புலியூர் வியாக்ரபுரீசுவரர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | ஓமாம்புலியூர் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | காட்டுமன்னார்குடி |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | காட்டுமன்னார்குடி வட்டார விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | திரு.வேலுதரன் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 36 |
| பிடித்தவை | 0 |