வழிபாட்டுத் தலம்
விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | விசாலீஸ்வரர் கோயில் |
| ஊர் | விளக்கணாம்பூண்டி |
| வட்டம் | பள்ளிப்பட்டு |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | விசாலீஸ்வரர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இக்கோயிலின் கருவறை புறச்சுவர் தேவகோட்டங்களில் தெற்கில் தென்முகக் கடவுள், வடக்கில் நான்முகன், அர்த்தமண்டப கோடடத்தில் துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் முகமண்டபத்தில் முற்காலச்சோழர்களின் கலைப்பாணியில் அமைந்த கணபதி, ஏழுகன்னியர் ஆகிய சிற்பங்கள் உள்ளன. கோயில் நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு வீரர்கள் தங்கள் தலையைக் கடவுளுக்கு அரிந்து அர்ப்பணிக்கும் நவகண்டச் சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்கள் அனைத்தும் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1000 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
|
சுருக்கம்
விசாலீஸ்வரர் கோயில் என வழங்கப்படும் இச்சிவன் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். இக்கோயிலில் உள்ள சிற்பங்களும் முந்தைய சோழர்கால சிற்பங்களாகவே காணப்படுகின்றன. இக்கோயிலில் எழில் வாய்ந்த மூத்ததேவி (ஜ்யேஷ்டா தேவி) சிற்பம் ஒன்று உள்ளது.
|
|
விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | விசாலீஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். கருவறை விமானத்தின் தலைப்பகுதி (சிகரம்) வேசரபாணியில் வட்டமாக அமைந்துள்ளது. மூன்று தளங்களை உடையதாக உள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சுந்தரராஜ பெருமாள் கோயில், பொன்னியம்மன் கோயில், சுந்தரவிநாயகர் கோயில், தொட்டிச்சி அம்மன் கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தணியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் சோளிங்கர் செல்லும் வழியில் ஆர்.கே பேட்டையில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | சோளிங்கர், ஆர்.கே பேட்டை |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | சோளிங்கர், திருத்தணி |
| அருகிலுள்ள விமான நிலையம் | சென்னை - மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | திருத்தணி விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 46 |
| பிடித்தவை | 0 |