வழிபாட்டுத் தலம்
பூவிருந்தமல்லி பெரிய பள்ளிவாசல்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | பூவிருந்தமல்லி பெரிய பள்ளிவாசல் |
|---|---|
| வேறு பெயர்கள் | சுன்னத்-வல்-ஜமாத் பள்ளிவாசல் |
| ஊர் | பூவிருந்தவல்லி |
| வட்டம் | பூவிருந்தவல்லி |
| மாவட்டம் | சென்னை |
| உட்பிரிவு | 8 |
| வழிபாடு | ஐந்து காலத் தொழுகை |
| திருவிழாக்கள் | ரமலான், பக்ரீத், மிலாடி நபி |
| காலம் / ஆட்சியாளர் | 3.8.1653 / கோல்கொண்டா அரசர் ஹசரத் ஆலம்பன்னா சுல்தான் அப்துல்லா சையத் |
| கல்வெட்டு / செப்பேடு | கோல்கொண்டா அரசர் ஹசரத் ஆலம்பன்னா சுல்தான் அப்துல்லா சையத் ஆட்சி புரியும்போது சென்னைப் பகுதிக்கு அரசப் பிரதிநிதியாக இருந்தவர் நவாப் ஜனாப்லத் உல் முல்கி மீர் முகம்மது என்பவர் ஆவார். அவரிடம் வேலை பார்த்த அலுவலர் அஸ்திராபாத் துல்ஃபிகார் மகன் ருஷ்தம் என்பவர் பூவிருந்தவல்லி மசூதியை முழுவதுமாக 3.9.1653 (ஹிஜ்ரி 1063 ஷவ்வல் 20) அன்று கட்டி முடித்ததை இரண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன. அப்போது பூந்தமல்லிக் கோடடை ஹவில்தாராக இருந்தவர் சுஜாயித ஆசாரி என்பவர் ஆவார். இந்த கல்வெட்டுகளை கல்வெட்டு ஆண்டறிக்கை (B) 1939 இல் 303, 304, வெளியிடப்பட்டுள்ளது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 367 ஆண்டுகள் பழமையானது. கட்டிய ஆண்டு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
பூவிருந்தமல்லி பெரிய பள்ளிவாசல்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | பூவிருந்தவல்லி சுன்னத்-வல்-ஜமாத் பெரியபள்ளி வாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | |
| செல்லும் வழி | |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை |
பூவிருந்தமல்லி பெரிய பள்ளிவாசல்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | பூவிருந்தவல்லி |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | கிண்டி, திருவள்ளூர் |
| அருகிலுள்ள விமான நிலையம் | சென்னை மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | பூவிருந்தவல்லி விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | திரு.வேலுதரன் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 43 |
| பிடித்தவை | 0 |