வழிபாட்டுத் தலம்
மணலூர் முனியாண்டி கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் மணலூர் முனியாண்டி கோயில்
வேறு பெயர்கள் முனியாண்டி கோயில்
ஊர் மணலூர்
வட்டம் மதுரை வடக்கு
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு வைகை ஆறு
வழிபாடு இருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் கி.பி.17-ஆம் நூற்றாண்டு/நாயக்கர் காலம்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் முனீசுவரர் பிரம்மாண்டமாக பெரிய அளவில் சுமார் 12 அடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன், நின்ற நிலையில், கையில் கதாயுதத்தை ஓங்கியபடி உக்கிரமாக காட்சியளிக்கிறார்.
தலத்தின் சிறப்பு முனீசுவரர்களுக்கு உருவம் அமைத்தல் மிகவும் அரிது. இங்கு முனியாண்டி தெய்வத்திற்கு உருவ வழிபாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 29 கிமீ தொலைவிலும் மணலூர் கிராமம் அமைந்துள்ளது. மணலூர் ஒரு தொல்லியல் சான்றுகளைக் கொண்ட வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள பழைய ஊராகும். மணலூரில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் அகழாய்வு நடத்தப்பெற்று, இவ்வூர் சங்க காலத்திலிருந்தே மக்கள் வாழ்ந்த ஊராக இவ்வகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள முனியாண்டி கோயில் இக்கிராம மக்களுக்கு காவல் தெய்வமாகவும், பல குடும்பத்தினருக்கு குலதெய்வமாகவும், ஊர் தெய்வமாகவும் விளங்குகிறது.
மணலூர் முனியாண்டி கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் திறந்த வெளியில், இயற்கை எழில் கொஞ்சும் வைகைஆற்றின் நீர்நிலையின் கரையில் முனீசுவரர் கோயில் அமைந்துள்ளது. பெரும்பாலும் நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் திறந்த வெளிகளிலேயே, மேற்கூரையற்ற நிலையில் அமைக்கப்படுகின்றன. பிரபஞ்ச சக்திகளே இத்தெய்வங்களின் மூலசக்தியாக அமைவதாகக் கருதப்பட்டு இங்ஙனம் கோயில் கட்டிடம் இன்றி வழிபாடு நடைபெறுகிறது. அத்தகைய நிலையிலேயே மணலூரில் அமைந்துள்ள முனீசுவரர் வழிபாடும் நடைபெறுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பாதுகாக்கும் நிறுவனம் ஊர் நிர்வாகம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் மணலூர் மாந்தையம்மன் கோயில், மணலூர் அகழாய்விடம்
செல்லும் வழி மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் மணலூர் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
மணலூர் முனியாண்டி கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் மணலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருப்புவனம்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி திருப்புவனம் வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தினேஷ்குமார் ரமேஷ்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 66
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்