Back
வழிபாட்டுத் தலம்
புலிப்பாக்கம் வியாக்ரபுரீசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் புலிப்பாக்கம் வியாக்ரபுரீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் புலிப்பாக்கம்
ஊர் புலிப்பாக்கம்
வட்டம் செங்கல்பட்டு
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் மாங்கல்யம் காத்த நாராயணி அம்மன்
ஆகமம் சிவாகமம்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு விமானத்தின் தாங்குதளத்தில் உள்ள குமுதப்படையில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயில் சோழர் காலத்தியது. முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகளைப் பெற்றுள்ளது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் தேவகோட்டங்களில் விஷ்ணு, நான்முகன் மற்றும் அர்த்தமண்டப புறக் கோட்டங்களில் விநாயகர் மற்றும் துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
தலத்தின் சிறப்பு 1000 ஆண்டுகள் பழமையானது. முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் உள்ளன.
சுருக்கம்
வியாக்ரபுரீசுவரர் திருக்கோயில், புலிப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டுக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புலிப்பாக்கம், புலிவனம், புலிவாய், புலியூர் என்ற பெயரில் அழைக்கப்படும் திருத்தலங்களெல்லாம் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதருடன் புராணத் தொடர்புடையதாக தலபுராணம் குறிப்பிடுகிறது. வியாக்ரபுரீசுவரர் இங்கு மூலவராக விளங்குகிறார். வியாக்ரபுரி என்று இத்திருத்தலம் காஞ்சிபுராணத்தில் அழைக்கப்படுகிறது.
புலிப்பாக்கம் வியாக்ரபுரீசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவாயிலைத் தொடர்ந்து நந்தி, பலிபீடம் ஆகியன அமைந்துள்ளன. இக்கோயிலில் கொடிமரம் இல்லை. ஒரு தளக் கற்றளியாக இக்கோயில் உள்ளது. புனரமைக்கப்பட்ட நிலையில் இக்கோயிலின் கல்வெட்டுகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளமையை காணமுடிகிறது. கருவறை விமானம் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், அதன் மேற்பகுதி தற்காலத்திய சுதைப்பணியாகவும் காட்சியளிக்கிறது. சதுரவடிவ கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். கருவறையைத் தொடர்ந்து சிறிய அர்த்தமண்டபம் மற்றும் முக மண்டபம் உள்ளன .கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களுக்கிடையில் அமைந்துள்ள தேவகோட்டங்களில் விஷ்ணு, நான்முகன் மற்றும் அர்த்தமண்டப புறக் கோட்டங்களில் விநாயகர் மற்றும் துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. விமானத்தின் தாங்குதளத்தில் உள்ள குமுதப்படையில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் பாலூர் சிவன் கோயில், ஏகாம்பரேசுவரர் கோயில்
செல்லும் வழி தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் புலிப்பாக்கம் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 முதல் மாலை 7.00 வரை
புலிப்பாக்கம் வியாக்ரபுரீசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் புலிப்பாக்கம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில்
அருகிலுள்ள விமான நிலையம் மீனம்பாக்கம்
தங்கும் வசதி செங்கல்பட்டு வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 19
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்