Back
வழிபாட்டுத் தலம்
திருக்கோட்டியூர் சௌம்யநாராயணப்பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருக்கோட்டியூர் சௌம்யநாராயணப்பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் திருக்கோட்டியூர், உரக மெல்லணையான், திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட ஷீராப்தி நாதன், பன்னக மருதுசாயி
ஊர் திருக்கோஷ்டியூர்
வட்டம் திருப்பத்தூர்
மாவட்டம் சிவகங்கை
உட்பிரிவு 2
மூலவர் பெயர் உரக மெல்லணையான், திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட ஷீராப்தி நாதன், பன்னக மருதுசாயி
தாயார் / அம்மன் பெயர் திருமாமகள் நாச்சியார்
திருக்குளம் / ஆறு தேவபுஷ்கரணி (திருப்பாற்கடல்)
வழிபாடு காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
திருவிழாக்கள் மாசி தெப்பத்திருவிழா, வைகுண்ட ஏகாதசி
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு முகம்மதிய படையெடுப்பின் போது இப்பெருமானை (உற்சவரை) கும்பகோணத்தில் மறைத்து வைத்திருந்தனர், என்றும் அதற்கு காரணமாய் இருந்த அமுதனுக்கு நன்றிப்பாக்கள் பாடப்பட்டன என்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். முதல் தளத்தில் “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்ததன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற” திருப்பாற்கடல் நாதனாகப் பள்ளி கொண்ட காட்சி. பாற்கடலில் இருந்து எழுந்துவந்த காரணத்தால் ஷீராப்தி நாதனாக முதல் தளத்திலும், அதன்பிறகு இரண்டாவது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் மூன்றாவது தளத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும் பெருமாள் எழுந்தருளியுள்ளார். தூய வெள்ளியில் உற்சவருக்கு விக்ரகம் உள்ளது. அஷ்டாங்க விமானத்தில் தென்திசை நோக்கிய நரசிம்மனுக்கு தெற்காழ்வான் (தட்சினேஸ்வரன்) என்றும், வடதிசை நோக்கிய நரசிம்மனுக்கு வடக்காழ்வான் (உத்தரேசுவன்) என்பதும் திருநாமம். திருக்கோட்டியூர் நம்பிகள் சன்னதியில் அவரின் திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன், சீதை, இலட்சுமணன், அனுமான், பவிஷ்யதாச்சாரியர் விக்ரகமும் எழுந்தருளியுள்ளன.
தலத்தின் சிறப்பு 1200ஆண்டுகள் பழமையானது. பெரியாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி.
சுருக்கம்
பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டது. மொத்தம் 40 பாசுரங்கள் மங்களாசாசனம். திருக்கோட்டியூர் வாழ்ந்த செல்வ நம்பிகளைத்தான் பெரியாழ்வார் தம் பாசுரத்தில் அவ்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர் கோன் அபிமான துங்கன் செல்வன் என்று தனக்கு பரதத்துவ நிர்ணயம் செய்ய உதவி செய்ததைக் குறிக்கிறார். இவ்வூரின் செல்வநம்பிகள் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனை புரோகிதர் ஆவர். பராசர பட்டர் என்பவர் கூரத்தாழ்வாருடைய திருக்குமாரர். வீரசுதந்திர சிம்மராயன் என்னும், சிற்றரசன் திருவரங்கன் கோயிலை ஜீர்னோத்தரணம் செய்கையில் “திருவீதி பிள்ளை பட்டர் என்பாரின் திருமாளிகை மதிற்புரத்து மூலையில் இருந்தது. அதை இடித்து அப்புறப்படுத்த சிற்றரசன் முனைந்தபோது மனம் வெதும்பிய பராசர பட்டர் சிற்றரசனை பகைத்துக்கொண்டு திருவரங்கத்தினின்றும் வெளியேறி 1 1/2 ஆண்டுகள் திருக்கோட்டியூரில் தங்கி இருந்தார். இவர் கோஷ்டிஸ்தவம் என்னும் நூல் எழுதியுள்ளார். இராமானுஜரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. செந்நெற்குடி புலவர் சுப்புராயலு என்பர் சௌமிய நாராயண மூர்த்திப் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இப்பெருமானுக்கு யாத்துள்ளார். சிவகங்கை சமஸ்தானத்து வாரிசினர் தொன்று தொட்டு இத்தலத்திற்குப் பெருந்தொண்டு புரிந்து வருகின்றனர்.
திருக்கோட்டியூர் சௌம்யநாராயணப்பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு மூன்று தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானம் இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் பட்டமங்கலம் குருபகவான் கோயில், வயிரவர் கோயில், வடக்கு வாழ் செல்வி கோயில், வளநாடு கருப்பர் கோயில்
செல்லும் வழி இத்திருப்பதி பசும்பொன் முத்துராமலிங்கர் மாவட்டத்தில் உள்ளது. திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை செல்லும் பேருந்துகள் யாவும் திருக்கோட்டியூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். கோவிலின் வாசலிலேயே பேருந்துகள் நிற்கும். காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லாமல் நேராக திருக்கோஷ்டியூர் செல்லும் பேருந்தும் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை
திருக்கோட்டியூர் சௌம்யநாராயணப்பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருக்கோஷ்டியூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மானாமதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி திருக்கோஷ்டியூர் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 23 Nov 2018
பார்வைகள் 58
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்