வழிபாட்டுத் தலம்
அருள்மிகு வடமூலேஸ்வரர் திருக்கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு வடமூலேஸ்வரர் திருக்கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கீழைப்பழுவூர் |
| ஊர் | கீழப்பழுவூர் |
| வட்டம் | அரியலூர் |
| மாவட்டம் | பெரம்பலூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | வடமூலேஸ்வரர், யோகவனேஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | அருந்தவநாயகி |
| தலமரம் | ஆல் |
| திருக்குளம் / ஆறு | பிரம்ம தீர்த்தம் |
| வழிபாடு | இரண்டு கால பூஜை. |
| திருவிழாக்கள் | பிரதோஷம், சிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / பழுவேட்டரையர் |
| கல்வெட்டு / செப்பேடு | “பெரும்பழுவூர் பழுவேட்டரையர்” என்ற தொடர் கல்வெட்டில் காணப்படுவதிலிருந்து சோழ மன்னர்களுடைய அதிகாரிகளாகிய பழுவேட்டரையர் என்னும் பட்டம் பெற்ற கூட்டத்தினர் சிலர் அக்காலத்தில் கோயில் காரியங்களைக் கவனித்து வந்ததாகத் தெரிகிறது என்பர். கல்வெட்டில் ‘பிரமதேயமான சிறு பழுவூர், ஆலந்துறை’ என்று தலமும், ‘ஆலந்துறை மகாதேவர்’ என்று சுவாமியும் குறிக்கப்படுகின்றனர். குலோத்துங்கன், ராஜாதிராஜன், ராஜேந்திரசோழன் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இம் மன்னர்கள் இக் கோயிலுக்கு நிலங்களை விட்டதும் வெள்ளிப் பாத்திரங்களையும் பொன்னாபரணங்களையும் வழங்கியதுமான செய்திகள் கல்வெட்டுக்களினால் தெரியவருகின்றன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும். இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது. இவ்வூர் மேலப்பழுவூர், கீழைப்பழுவூர் என்ற இரு பிரிவாக உள்ளது. கீழப்பழுவூரில் தான் பாடல் பெற்ற சிவாலயம் உள்ளது. இந்த சிவாலயம் ஒரு முகப்பு வாயிலுடனும், அதையடுத்து கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடனும் காட்சி அளிக்கிறது.
|
|
அருள்மிகு வடமூலேஸ்வரர் திருக்கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கொடும்பாளூர், விராலிமலை |
| செல்லும் வழி | அரியலூர் - திருவையாறு சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து தெற்கே சுமார் 12 கி.மி. தொலைவிலும், திருவையாறில் இருந்து வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் கீழப்பழுவூர் உள்ளது. கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை. |
அருள்மிகு வடமூலேஸ்வரர் திருக்கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | கீழப்பழுவூர் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | அரியலூர் |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | அரியலூர் வட்டார விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | American Institute of Indian Studies |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | American Institute of Indian Studies |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 07 Sep 2018 |
| பார்வைகள் | 81 |
| பிடித்தவை | 0 |