Back
வழிபாட்டுத் தலம்
வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில்
வேறு பெயர்கள் வேதஸ்ரேணி
ஊர் வேளச்சேரி
வட்டம் வேளச்சேரி
மாவட்டம் சென்னை
தொலைபேசி 044-22264337
உட்பிரிவு 1
மூலவர் பெயர் தண்டீஸ்வரர்
தாயார் / அம்மன் பெயர் கருணாம்பிகை
தலமரம் வில்வமரம்
திருக்குளம் / ஆறு எமதீர்த்தம்
ஆகமம் காமீகம்
வழிபாடு காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
திருவிழாக்கள் சித்திரை பௌர்ணமி, ஆடி ஞாயிறு, மகாசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / சுந்தரசோழன்
கல்வெட்டு / செப்பேடு ஜின சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுகளால் அறியப்படும் வெளிச்சேரி (ஊருக்கு வெளிப்புறம் உள்ள சேரி) இன்று வேளச்சேரியாக மருவியுள்ளது. இங்குள்ள தண்டீஸ்வர்ர் கோயிலின் கருவறை சோழர் கால கட்டிடப் பாணியில் கல்வெட்டுகளுடன் அமைந்துள்ளது. இராசராச சோழனின் தந்தை சுந்தர சோழன் தண்டீஸ்வரருக்கு 10-ம் நூற்றாண்டில்  எடுப்பித்த கோவில் என்று கருவறை சுவர்களில் உள்ள கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன.கருவறையில் உள்ள இலிங்க வடிவில் உள்ள மூலவர் கல்வெட்டுக்களில் திருத்தண்டீஸ்ச்சுரம் உடைய நாயனார் என அழைக்கப்படுகிறார்.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறைத் திருச்சுற்றின் தெற்குக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் இலிங்கோத்பவர், வடக்கில் நான்முகன் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை சோழர்கால கலைப்பாணியை காட்டி நிற்கின்றன. அர்த்த மண்டபத்தின் தென்புற கோட்டத்தில் கணபதியும், வடபுற கோட்டத்தில் துர்க்கையும் உள்ளனர். கருவறைத் திருச்சுற்றில் சண்டிகேசுவரர், சப்தகன்னியர், வீரபத்திரர் ஆகிய சோழர் கால சிற்பங்கள் உள்ளன. காசி விஸ்வநாதர் தனிக் கருவறை, சொக்கநாதர் தனிக் கருவறை ஆகிய சிறு சுற்றுக் கோயில்களில் இலிங்கம் மற்றும் நந்தி உருவங்கள் அமைந்துள்ளன. திருமதிலின் மேல் காவல் பூதங்கள், நந்தி ஆகிய சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மரத்தாலான வாகனங்களாக அன்னம், கருடன் ஆகியவை உள்ளன. கருணாம்பிகை என்னும் தேவியின் சிற்பம் தனிக் கருவறையில் காணப்படுகின்றது. திருச்சுற்றின் ஈசான்ய மூலையில் சூரியனும், தென் மேற்கு மூலையில் சோமாஸ்கந்தரும், ஶ்ரீ சந்திரசேகரும், மகாலட்சுமியும், சரஸ்வதியும் அடுத்தடுத்து உள்ளனர்.
தலத்தின் சிறப்பு 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
சுருக்கம்
சென்னையின் வேளச்சேரி வட்டத்தில் வேளச்சேரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தண்டீஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியை இன்றும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. வேள் சேரி என்றிருந்ததே வேளச்சேரி ஆகியிருக்க வேண்டும். இப்பகுதி குறுநில மன்னனாகிய வேள் ஒருவனால் ஆட்சி செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்பகுதியில் சோழர்கள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்த இக்கோயிலை கட்டி அதற்கு நிவந்தங்களையும் அளித்துள்ளனர். முதலாம் இராஜராஜசோழனின் தந்தையாகிய சுந்தரசோழனால் இக்கோயில் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. இக்கோயிலில் உள்ள சப்தமாதர்களின் தொகுதியில் உள்ள சாமுண்டி தேவியே தற்பொழுது செல்லியம்மன் கோயில் என்று தனிக்கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலின் தலவரலாற்றின் படி எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற திருத்தலம் என்பதால், இங்கு மக்கள் அறுபது, எண்பதாம் திருமணம் மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்து கொள்கிறார்கள். வேளச்சேரியில் சிவத்தலம் மற்றும் வைணவத் தலங்களை சோழர்கள் கட்டியுள்ளனர். யோக நரசிம்ம பெருமாள் கோயில் வேளச்சேரியில் தற்போது வழிபாட்டில் உள்ளது. இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட வைணவத் தலமாயிருக்க வேண்டும். பல முனிவர்கள் ஒன்றிணைந்து இத்தலத்தில் தொடர்ந்து யாகம் செய்ததன் பலனாக அவர்களுக்குத் திருமால் யோக நரசிம்மராக்க் காட்சி தந்ததாகவும், அதனால் வேள்விகள் நடந்த இத்தலம் வேள்விச்சேரி என்றும் பின்னர் வேளச்சேரி என அழைக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது.
வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் கட்டப்பட்டுள்ள ஐந்து நிலை இராஜகோபுரத்தினை அடுத்துள்ள கோயில் வளாகத்தில் தண்டீஸ்வரரின் கருவறை விமானத்தைத் தவிர ஏனைய கட்டட அமைப்புகள் தற்காலத்தியனவாக காட்சியளிக்கின்றன. கருவறை விமானம் தாங்குதளம் முதல் கூரை வரை கற்றளியாக உள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சோழர்கால கணபதி, தட்சிணாமூரத்தி, விஷ்ணு, நான்முகன், துர்க்கை ஆகிய இறையுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கருவறைத் திருச்சுற்றில் 63 நாயன் மார்களின் கற்சிற்பங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. ஜின சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுகளால் அறியப்படும் வெளிச்சேரி (ஊருக்கு வெளிப்புறம் உள்ள சேரி) இன்று வேளச்சேரியாக மருவியுள்ளது. இங்குள்ள தண்டீஸ்வர்ர் கோயிலின் கருவறை சோழர் கால கட்டிடப் பாணியில் கல்வெட்டுகளுடன் அமைந்துள்ளது. இராசராச சோழனின் தந்தை சுந்தர சோழன் தண்டீஸ்வரருக்கு 10-ம் நூற்றாண்டில்  எடுப்பித்த கோவில் என்று கருவறை சுவர்களில் உள்ள கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன.கருவறையில் உள்ள இலிங்க வடிவில் உள்ள மூலவர் கல்வெட்டுக்களில் திருத்தண்டீஸ்ச்சுரம் உடைய நாயனார் என அழைக்கப்படுகிறார்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் செல்லியம்மன் கோயில், யோகநரசிம்மர் கோயில், அஷ்டலெட்சுமி கோயில், திருவல்லீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்
செல்லும் வழி சென்னை எழும்பூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் வேளச்சேரியில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 5.30-11.00 முதல் மாலை 4.30-8.30 வரை
வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் வேளச்சேரி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சென்னை எழும்பூர், வேளச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி சென்னை மாநகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 58
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்