வழிபாட்டுத் தலம்
செஞ்சி வெங்கடரமணர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | செஞ்சி வெங்கடரமணர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | லெட்சுமி நரசிம்மர் கோயில் |
| ஊர் | செஞ்சி |
| வட்டம் | செஞ்சி |
| மாவட்டம் | விழுப்புரம் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | வெங்கடரமணர் |
| தாயார் / அம்மன் பெயர் | லட்சுமி |
| வழிபாடு | ஒரு கால பூசை |
| திருவிழாக்கள் | வைகுண்ட ஏகாதசி, திருவோணம், இராமநவமி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.1540 / செஞ்சி நாயக்கர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | வாயில் மண்டபத்தின் மேல் பகுதியில் வரிசையாக நின்று பலர் வணங்குவது போன்ற அழகிய சிற்பங்கள் உள்ளன. திருச்சுற்றில், ஒரே கல்லிலான லட்சுமி நரசிம்மர் சிலைகள் தென் மேற்கிலும், வடமேற்கிலும் உள்ளன. கூரையில் பல்லி மற்றும் ராகு, கேது சந்திரனை விழுங்குவது போன்ற சிற்பங்கள் உள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 400 ஆண்டுகள் பழமையானது. செஞ்சி நாயக்கரின் கலைப்படைப்பு. |
|
சுருக்கம்
கி.பி.15-ஆம் நூற்றாண்டு நாயக்கர் கால கலைக்கோயில். விஜய நகர பேரரசின் கீழ் , செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னரால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
|
|
செஞ்சி வெங்கடரமணர் கோயில்
| கோயிலின் அமைப்பு | செஞ்சி வெங்கடரமணர் கோயிலின் மேற்குபுறம், கருவறையில் விக்ரகமற்ற நரசிம்மர் சன்னதி உள்ளது. இக்கோயில் சிறிய திருச்சுற்றையும், தூண்களுடன் நீண்ட நுழைவாயில் மண்டபத்தையும் கொண்டுள்ளது. சிறிய சுதையாலான கோபுரத்தைப் பெற்றுள்ளது. இதில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | செஞ்சிக் கோட்டை, ஊரணித்தாங்கல் சமணப்படுக்கைகள், இராஜகிரி கோட்டை |
| செல்லும் வழி | செஞ்சியில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 Mar 2019 |
| பார்வைகள் | 85 |
| பிடித்தவை | 0 |