வழிபாட்டுத் தலம்
திருவாரூர் பரவையுண் மண்டளி
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருவாரூர் பரவையுண் மண்டளி |
|---|---|
| வேறு பெயர்கள் | ஆரூர் பரவையுண்மண்டளி |
| ஊர் | திருவாரூர் |
| வட்டம் | திருவாரூர் |
| மாவட்டம் | திருவாரூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | தூவாய் நாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | பஞ்சின் மெல்லடியம்மை |
| திருக்குளம் / ஆறு | அக்னி குளம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி ஆரூத்ரா தரிசனம், மாசி தெப்போத்சவம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் சிவலிங்க வடிவாக இறைவன் எழுந்தருளியுள்ளார். தேவகோட்டங்களில் உள்ள சிற்பங்களில் தென்முகக் கடவுள், கணபதி ஆகிய இறையுருவங்கள் உள்ளன. விமானத்தின் தளப்பகுதியில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இறைவி திருமுன்னில் நின்றநிலையில் காணப்படுகிறார். |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலம். சுந்தரர் இத்தலத்தைப் பாடியுள்ளார். |
|
சுருக்கம்
இக்கோயில் திருவாரூரில் கிழக்கு ரத வீதியில் தேரடிக்கு எதிரில் உள்ளது. இத்தல இறைவனின் பெயர் தூவாய்நாதர். மக்கள் இக்கோயிலைத் துர்வாசர் கோவில் என்று தான் அழைக்கின்றனர். சுந்தரர் பாடல் பெற்றது இத்தலம். இக்கோயிலின் பின்புறம் திருநீலகண்ட நாயனார் கோயிலும், பரவை நாச்சியார் கோயிலும் உள்ளன. சுந்தரரின் தேவியார் பரவை நாச்சியார் வழிபட்ட தலம் ஆகும். பரவையுண் மண்டளி என்பதில் பரவை என்பது கடலைக் குறிக்கிறது.
|
|
திருவாரூர் பரவையுண் மண்டளி
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் மூன்று நிலை இராஜகோபுரம் கொண்டுள்ளது. சிறிய கற்றளியாக விளங்கும் இக்கோயில் கருவறை விமானத்தின் தளப்பகுதி சுதையாலானது. விமானத்தின் தேவகோட்டங்களில் இறையுருவங்கள் உள்ளன. கருவறைத் திருச்சுற்றின் வெளியில் நந்தி, பலிபீடம் ஆகியன அமைந்துள்ளன. முதற்சுற்றில் சிறு சன்னதிகள் உள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருவாரூர் தியாகராஜர் கோயில், திருக்குவளை, திருக்கண்ணமங்கை, திருவலிவலம் |
| செல்லும் வழி | திருவாரூர் தியாகராஜர் கோயிலின் கிழக்கு ரதவீதியில் உள்ள தேரடிக்கு எதிரில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை - மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 Mar 2019 |
| பார்வைகள் | 110 |
| பிடித்தவை | 0 |