வழிபாட்டுத் தலம்
அருள்மிகு காணியாளன் ஸ்ரீபொன்முனியாண்டி கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு காணியாளன் ஸ்ரீபொன்முனியாண்டி கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | முனியாண்டி கோயில் |
| ஊர் | மகபூப்பாளையம் |
| வட்டம் | மதுரை மேற்கு |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| திருக்குளம் / ஆறு | கிருதமால் நதி |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மகாசிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | காணியாளன் பொன்முனியாண்டி கோயிலில் முனிசுவரரின் சிற்பம் முதன்மைத் தெய்வமாக வழிபடப்படுகிறது. |
| தலத்தின் சிறப்பு | நிலத்தையும், கால்நடைகளையும் காக்கும் தெய்வமாக வழிபடப்பெறுகிறார். |
|
சுருக்கம்
காணியாளன் பொன்முனியாண்டி சுவாமி கோயில் மதுரை நகரில் மகபூப்பாளையத்தின் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இப்பகுதி முன்பு வேளாண்மை நிலமாக இருந்திருக்க வேண்டும். அப்பொழுதிலிருந்து முனியாண்டி வழிபாடு இங்கு நடைபெற்றுள்ளது. காணியாளன் என்பது நிலத்திற்குரியவன் என்ற பொருளிலும் பொன் முனியாண்டி என்பது கால்நடைகளின் வளத்திற்குரியவன் என்றும் பொருள்படும். எனவே இப்பகுதி பண்டைய காலத்தில் வேளாண்மையும், கால்நடைவளர்ப்பும் ஒருங்கிருந்த பகுதியாய் விளங்கியிருக்கிறது.
|
|
அருள்மிகு காணியாளன் ஸ்ரீபொன்முனியாண்டி கோயில்
| கோயிலின் அமைப்பு | குடியிருப்புகளுக்கு மத்தியில் கோயில் அமைந்துள்ளது. எனவே சிறிய கட்டிடமாக உள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தனியார் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், கோச்சடை முத்தையா கோயில் |
| செல்லும் வழி | மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் செல்லும் பேருந்துகள் மகபூப்பாளையம் வழியே செல்கிறது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 38 |
| பிடித்தவை | 0 |