Back
வழிபாட்டுத் தலம்
பூந்தமல்லி சி.எஸ்.ஐ.வெஸ்லி தேவாலயம்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் பூந்தமல்லி சி.எஸ்.ஐ.வெஸ்லி தேவாலயம்
வேறு பெயர்கள் சி.எஸ்.ஐ.வெஸ்லி தேவாலயம்
ஊர் பூந்தமல்லி
வட்டம் பூந்தமல்லி
மாவட்டம் திருவள்ளூர்
உட்பிரிவு 8
தாயார் / அம்மன் பெயர் மேரி மாதா
தலமரம் கிறிஸ்துமஸ் மரம்
ஆகமம் வேதாகமம்
திருவிழாக்கள் கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு
காலம் / ஆட்சியாளர் கி.பி 1823
சுவரோவியங்கள் தேவாலயத்தின் சாளரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகளில் கொடிக்கருக்கு வேலைப்பாடுகள் வரையப்பட்டுள்ளன.
தலத்தின் சிறப்பு 197 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
சுருக்கம்
கி.பி.1823-இல் கட்டப்பட்ட பூந்தமல்லியில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. வெஸ்லி தேவாலயம் அதன் பழமைத் தன்மை மாறாமல் இன்றும் வழிபாட்டில் உள்ள திருத்தலமாக விளங்குகிறது. புதிய வெஸ்லி தேவாலயத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கத்தில் இரண்டு பழைய தேவாலயங்கள் உள்ளன. இந்த தேவாலயங்கள் மெதடிஸ்ட் மிஷனின் ஒரு பகுதியாகும். இரண்டு தேவாலயங்களும் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகின்றன.
பூந்தமல்லி சி.எஸ்.ஐ.வெஸ்லி தேவாலயம்
கோயிலின் அமைப்பு இந்த தேவாலயம் எளிய முகப்புடன் காட்சியளிக்கிறது. பிரார்த்தனைக் கூடத்தின் மேற்கூரை மரத்தாலான வேலைப்பாடுடன் நீள் செவ்வக வடிவில் வண்டிக்கூடு போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் தென்னிந்திய கத்தோலிக்க திருச்சபை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் புனித யோவான் திருமுழுக்கு ஆலயம், புனித மேரி மேக்டலின் தேவாலயம்
செல்லும் வழி பூந்தமல்லி நெடுஞ்சாலை வழி செல்லும் சென்னை மாநகரப் பேருந்துகள் மூலம் பூந்தமல்லியை அடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 8:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை
பூந்தமல்லி சி.எஸ்.ஐ.வெஸ்லி தேவாலயம்
அருகிலுள்ள பேருந்து நிலையம் பூவிருந்தவல்லி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருவள்ளூர்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை மீனம்பாக்கம்
தங்கும் வசதி பூந்தமல்லி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 34
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்