Back
வழிபாட்டுத் தலம்
பாலூர் பதங்கீசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் பாலூர் பதங்கீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் திருப்பதங்காடு உடையார், திருப்பதங்காடு உடைய மகாதேவர், திருப்பதங்காடு உடைய நாயனார்
ஊர் பாலூர்
வட்டம் செங்கல்பட்டு
மாவட்டம் காஞ்சிபுரம்
தொலைபேசி 044 - 27437011
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் வண்டார்குழலி என்ற பிரமராம்பிகை
திருக்குளம் / ஆறு சூரிய புஷ்கரனி
ஆகமம் சிவாகமம்
வழிபாடு இருகால பூசை
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் ஆலமர்ச் செல்வன், அண்ணாமலையார், நான்முகன் ஆகிய கருவறை தேவகோட்டத் தெய்வங்களும், நர்த்தன விநாயகர், துர்க்கை ஆகிய அர்த்தமண்டபத் தெய்வங்களும் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன. தேவி வண்டார்குழலி தனி திருமுன் கொண்டு விளங்குகிறாள். கருவறையில் இலிங்கவடிவில் இறைவன் காணப்படுகிறார். உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற சிவலிங்கத்தை அவள் தழுவிய கோலம் அழகுமிக்க புடைப்புச் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளது.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. பாடல் பெற்ற தலம்.
சுருக்கம்
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவில் பாலூர் உள்ளது. இங்குள்ள பதங்கீசர் கோயில் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. இக்கோயில் கல்வெட்டுகளில் திருப்பதங்காடு உடையார், திருப்பதங்காடு உடைய மகாதேவர், திருப்பதங்காடு உடைய நாயனார் என்று இத்தலத்து இறைவன் குறிக்கப்பட்டுள்ளார். “பதங்கம்’ என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால், பதங்கீசுவரர் என்று இறைவன் அழைக்கப்படுகிறார். சங்ககாலத்தில் திருப்பகங்காடு என்ற பெயரிலும், ராஜேந்திர சோழன் காலத்தில் ராஜேந்திர சோழநல்லூர் என்ற பெயரிலும், பின்னர் பாலையூர் என்றும், தற்காலத்தில் பாலூர் என்றழைக்கப்படும் ஊர், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் பாலாற்றங்கரையில் அமைந்திருக்கிறது. சூரியன் வழிபட்ட பதங்கீஸ்வரர் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது. தாயார் பெயர் மங்களாம்பிகை. சிவனடியார் திருக்கூட்டம் பூமியில் புதைந்திருந்த லிங்கத்தை முழுமையாகப் பெயர்த்தெடுக்க, அதன் கோமுகியின் எதிர்ப்புறம் சண்டிகேஸ்வரரும் இருந்திருக்கிறார். இரண்டு திருச்சுற்றுகளுடன் அமைந்த பெரிய கற்கோயில். இறைவன், இறைவியரின் கருவறை இரண்டும் கிழக்கு பார்த்து அமைந்துள்ளன. இறைவன் கருவறை விமானத்தில் அமைந்துள்ள வெளிப்புற தேவகோட்டத்தில் பஞ்ச மூர்த்திகளும், திருச்சுற்றில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வர், பைரவர் சூரியன், மகாமண்டபத்தில் நால்வர் சன்னதிகளும் உள்ளன. ஆதியில் ஸ்ரீ சூரியனால் வழிபடப்பட்டதால் பாஸ்கர க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் சூரிய புஷ்கரனி என்றே அழைக்கப்படுகிறது.
பாலூர் பதங்கீசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவாயிலைத் தொடர்ந்து நந்தி, பலிபீடம் ஆகியவற்றின் முன்னால் ஒரு சிறிய இராஜகோபுரம் காணப்படுகின்றது. இக்கோயிலில் கொடிமரம் இல்லை. கோயிலின் நந்திமண்டபம் பல்லவர் காலத்துச் சிம்மத் தூண்களைக் கொண்டதாக உள்ளது. சதுரவடிவ கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். கருவறையைத் தொடர்ந்து அர்த்தமண்டபம், மகாமண்டபம், முக மண்டபம் மற்றும் உற்சவ மண்டபம் ஆகியன புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட தூண்களுடன் அமைந்துள்ளன. காலபைரவர், நவக்கிரகம், விநாயகர், சண்டிகேசுவர்ர் ஆகிய உடன்கூட்ட தெய்வங்களின் தனித்தனி திருமுன்கள் காணப்படுகின்றன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் பாலூர் சிவன் கோயில், ஏகாம்பரேசுவரர் கோயில்
செல்லும் வழி செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவில் பாலூர் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
பாலூர் பதங்கீசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் பாலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில்
அருகிலுள்ள விமான நிலையம் மீனம்பாக்கம்
தங்கும் வசதி செங்கல்பட்டு, தாம்பரம் வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 25
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்