வழிபாட்டுத் தலம்
திருக்கச்சூர் மருந்தீசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருக்கச்சூர் மருந்தீசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருக்கச்சூர் மலைக்கோயில் |
| ஊர் | திருக்கச்சூர் |
| வட்டம் | செங்கல்பட்டு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| தொலைபேசி | 044 - 27464325, 09381186389 |
| உட்பிரிவு | 1 |
| தாயார் / அம்மன் பெயர் | இருள்நீக்கிய அம்மை |
| தலமரம் | ஆல் |
| திருக்குளம் / ஆறு | கூர்ம தீர்த்தம் |
| ஆகமம் | சிவாகமம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | மகாசிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | மகாமண்டபத்தில் அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள் நிறைந்துள்ளன. இவற்றில், துவார பாலர்கள், லிங்கோத்பவர், மாவடி சேவை, பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் என பலரின் சிற்பங்கள் வெகு அழகாக அமைந்துள்ளன. மண்டபத்தின் நடுவில் தாமரை போன்ற அமைப்பில் சிறிய சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. கருவறைத் திருச்சுற்றின் கருவறை விமானத்தின் தேவகோட்டத்தில் அமைந்த விநாயகர், தென்முகக்கடவுள், திருமால், நான்முகன் ஆகிய சிற்பங்களைக் காணமுடிகின்றது. சண்டிகேசுவரர் இங்கே பிரம்மமுக சண்டிகேசுவரராக, நான்கு முகங்களுடன் காட்சியளிக்கிறார். அம்மன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அபய வரதக்கரங்களுடன் திகழ்கிறார். |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. பாடல் பெற்ற தலம். |
|
சுருக்கம்
திருக்கச்சூர் கோவிலின் இணைக்கோவிலான மலைக்கோவில் ஆலக்கோவிலில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும் இறைவி இருள்நீக்கிய அம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். சுந்தரர் திருக்கழுக்குன்றம் வழிபட்டுத் திருக்கச்சூரை அடைந்து ஆலக்கோயில் அமுதனைத் தொழுது, மதிற்புறத்தே பசியுடன் அமர்ந்திருக்க, இறைவன் அந்தணர் வடிவில் வந்து, சுந்தரை அங்கேயே இருக்கச் செய்து இவ்வூரிலுள்ள அடியார்கள் வீடுதோறும் சென்று, உணவு பெற்று வந்து, சுந்தரருக்கு இட்டு, அவர் பசியை போக்கினாராம். பசி நீங்கப் பெற்ற சுந்தரர், இறையருள் கருணையை வியந்து, 'முதுவாயோரி ' என்னும் பதிகம் பாடிப் போற்றினார். முதலில் ஆலக்கோயிலையும், பின்பு மருந்தீசர் கோயிலையும் தரிசிக்க வேண்டும் என்பது மரபு.
|
|
திருக்கச்சூர் மருந்தீசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | திருக்கச்சூர் கோயிலின் இணைக்கோயிலாகத் திகழ்கிறது, மருந்து மலை மருந்தீஸ்வரர் கோயில். கோயிலின் முன் நான்கு கால் மண்டபம், ராஜகோபுரம் இல்லாத நுழைவாயில் ஆகியவற்றைக் கடந்து செல்லலாம். உள்ளே, 'மண்ணே மருந்தான' மருந்தீசர் சந்நிதி முகப்பு. உள்ளே நுழையும்போதே, மகாமண்டபத்தில் அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள் நிறைந்துள்ளன. அம்பிகைக்குத் தனிச்சிறப்பு சேர்க்கும் இக்கோயில் 108 சக்தி பீடங்களில் ஒன்றான ஒளஷதை எனும் சக்தி பீடம் என்கிறார்கள். அதற்கேற்ப இங்கே அம்பிகை இருள் நீக்கி அம்மை எனும் பெயரில் திகழ்கிறார். ஆலயத்தினுள்ளே விநாயகரை வழிபட்டு வரும் போது, சுவாமி சன்னிதிக்கு எதிரில் ஒரு சாளரம் உள்ளது. கொடிமரத்தின் அருகே நாகலிங்க மரமும் அதன் கீழே நாகர் சிற்பங்களும் உள்ளன. சுப்பிரமணியர் சந்நிதி அருகே, 'ஔஷத தீர்த்தக் குளம்' உள்ளது. கீழிறங்கிச் செல்லும் வகையில், படிக்கற்கள் உள் பக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே, நவக்கிரக சன்னிதி உள்ளது. பைரவர் சன்னிதியும் இங்கே சிறப்பு. விநாயகரின் நேர் பார்வையில் நவகிரக சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில் |
| செல்லும் வழி | சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட் தாண்டி சுமாராக 1 கி.மி. தூரம் சென்ற பின் வலதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 1 கி.மி. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம். ஊரின் நடுவே கோவில் உள்ளது. சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது. இல்லாவிடில் சுமார் 2 கி.மி. தொலைவு நடந்து செல்ல வேண்டும். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை |
திருக்கச்சூர் மருந்தீசுவரர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | திருக்கச்சூர் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில் |
| அருகிலுள்ள விமான நிலையம் | மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | செங்கல்பட்டு வட்டார விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | திரு.வேலுதரன் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 37 |
| பிடித்தவை | 0 |